சென்னைதேசிய சட்ட பல்கலையில் சேர்வதற்கான, நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, மார்ச், 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில், நாடு முழுவதும், 21 இடங்களில், தேசிய சட்ட பல்கலைகள் செயல்படுகின்றன. தமிழகத்தில், திருச்சியில், தேசிய சட்ட பல்கலை செயல்படுகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இந்த கல்லுாரிகளில், எல்.எல்.பி., படிப்புகளில் சேர, ‘கிளாட்’ என்ற, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.நடப்பாண்டில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், வரும் கல்வி ஆண்டில், தேசிய சட்ட பல்கலையில் சேர்வதற்கு, கிளாட் நுழைவு தேர்வு, மே, 12ல் நடக்க உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு, ஜனவரியில் துவங்கியது; மார்ச், 31ல் முடிகிறது. கூடுதல் விபரங்களை, https://clatconsortiumofnlu.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here