அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டத்தில், ஏதேனும் ஒரு மனைக்கு விண்ணப்பம் வந்திருந்தாலும், அந்த மனைப்பிரிவில் உள்ள அத்தனை மனைகளையும் வரன்முறை செய்யும்படி, நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம், 2017 மே, 4ல் அறிவிக்கப்பட்டது. இவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறுவதற்கான அவகாசம், 2018 நவ., 3ல் முடிந்தது. பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில், மனைகளையும், மனை பிரிவுகளையும் வரன்முறைபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.அதேநேரத்தில், மனை பிரிவுகளில் இடம் வாங்கியும், அதை வரன்முறை செய்ய விண்ணப்பிக்காமல் நிறைய பேர் உள்ளனர். அதனால், அந்த மனைகளின் நிலை குறித்து கேள்வி எழுந்தது. எனவே, அவற்றுக்கு புதிய சலுகை வழங்க, டி.டி.சி.பி., முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, டி.டி.சி.பி., கமிஷனர், ராஜேஷ் லக்கானி பிறப்பித்துள்ள உத்தரவு:வரன்முறை திட்டத்தின் இறுதி நாளான, 2018 நவ., 3க்குள், ‘லே – அவுட்’டில், யாராவது ஒருவர் மனைக்கு வரன்முறை கோரி விண்ணப்பித்து இருந்தாலும், மீதமுள்ள மனைகளையும், வரன்முறை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து, நேரில் அல்லது தபால் வாயிலாக விண்ணப்பம் பெற்று, அத்துடன், 500 ரூபாய் பதிவு கட்டணத்தையும் பெற்று, தொழில்நுட்ப ஒப்புதல் ஆணை வழங்க வேண்டும்.இந்த ஆணை அடிப்படையில், வளர்ச்சி கட்டணம், வரன்முறை கட்டணங்களை வசூலித்து, சம்பந்தப்பட்டோருக்கு வரன்முறை உத்தரவுகளை, உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டும். நவ., 3க்கு முன், யாரும் விண்ணப்பிக்காத, லே – அவுட்களுக்கு இந்த சலுகை பொருந்தாது.இவ்வாறு, உத்தரவில் கூறியுள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here