சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு வரும் ஜூன் 2ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக இத்தேர்வில் பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்று (22-02-2019) இந்த ராசிக்காரருக்கு பெண்களால் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது..!!

UPSC CSE 2019 Exam: சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முறையாக பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு

TIMESOFINDIA.COM | Updated: 20 Feb 2019, 03:08 PM

சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு வரும் ஜூன் 2ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக இத்தேர்வில் பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
samayam tamil

ஹைலைட்ஸ்

  • சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முறையாக பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு
  • விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 18, 2019 (மாலை 6 மணிக்குள்).
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பணிகளில் சேர்வதற்கான சிவில் சர்வீசஸ்முதல் நிலை தேர்வு வரும் ஜூன் 2ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற 24 வகையான பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை யு.பி.எஸ்.சி. நடத்தும். தற்போது 896 காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற உள்ளது

இத்தேர்வு மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதலில் முதல் நிலை தேர்வும் பின்பு முதன்மைத் தேர்வு நடத்தப்படும். கடைசியாக நேர்முகத் தேர்வு நடக்கும். இந்த ஆண்டு முதல் நிலை தேர்வு ஜூன் 2ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் முறையாக இத்தேர்வில் பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடுஅமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பிப்ரவரி 19 (நேற்று) முதல் இத்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது. http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு

தேர்வு எழுத விண்ணப்பிப்பவர் 21 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். ஆகஸ்ட் 1, 2019ல் 32 வயதை எட்டாதவராகவும் இருக்க வேண்டும். ஆகஸ்ட் 2, 1987க்கு முன்போ ஆகஸ்ட் 1, 1998க்கு பின்போ பிறந்தவராக இருக்கக் கூடாது.

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 18, 2019 (மாலை 6 மணிக்குள்).
  • ஆன்லைனில் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் மார்ச் 18, 2019 (மாலை 6 மணிக்குள்).
  • அஞ்சல் வழியில் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் மார்ச் 17, 2019.
  • முதல் நிலை (Prelims) தேர்வு நடைபெறும் நாள் ஜுன் 2, 2019

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here