*தேதி : 22.02.2019*

அனுப்புனர :

*சா அருணன்*
*நிறுவனத் தலைவர்*
*தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு*

பெறுநர் :

*மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள்*
*தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும்* *திராவிட முன்னேற்றக்கழக தலைவர்*

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான *மாண்புமிகு மு.க. ஸ்டாலின்* அவர்களுக்கு மத்திய மாநில அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சார்பில் பணிவான வேண்டுகோள்

அப்போதைய பாரதிய ஜனதா அரசு 2004 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வந்து 2004ஆம் ஆண்டிற்கு பின்னர் மத்திய மாநில அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் அமர்த்தப்பட்டனர் இதனால் கோடிக்கணக்கான மத்திய மாநில அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எதிர்கால வாழ்வாதாரமே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆண்டுகளாக பல கோரிக்கைகளை வைத்தும் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் மத்திய மாநில அரசுகள் நியாயமான கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுத்து வருகின்றன

உதாரணத்திற்கு 2019 – 2020 ஆம் ஆண்டு மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூட புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை புறந்தள்ளி விட்ட சூழ்நிலையில்

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் *மாண்புமிகு மு. க. ஸ்டாலின்* அவர்கள் அங்கம் வகிக்கும் தேசிய அளவிலான கூட்டணியின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமுல்படுத்துவோம் என்ற அறிவிப்பு தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்ய தாங்கள் வலியுறுத்தி தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்ய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

அதுமட்டுமல்லாமல் தங்கள் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் திட்டமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த அமல்படுத்து வேண்டி கேட்டுக்கொள்கிறேன் அப்படி அமல்படுத்தும் பட்சத்தில் ஒட்டுமொத்த மத்திய மாநில அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் என்றென்றும் எப்போதும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்

*சா அருணன்*
*நிறுவனத் தலைவர்*
*தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here