• மேஷம்
  மேஷம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.
 • ரிஷபம்
  ரிஷபம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனா லும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தொழிலில் லாபம்அதிகரிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
 • மிதுனம்
  மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நினைத்ததைமுடிக்கும் நாள்.
 • கடகம்
  கடகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அழகு, இளமைக் கூடும் நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். 
 • சிம்மம்
  சிம்மம்: மதியம் 1.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக்கொண்டிருக்காதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.
 • கன்னி
  கன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கடனில் ஒரு பகுதியை தீர்க்கமுயற்சி செய்வீர்கள். சகோதர வகையில் மனத் தாங்கல் வரும். செலவினங்கள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 1.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் முன்யோசனை தேவைப்படும் நாள்.
 • துலாம்
  துலாம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அரசால் அனுகூலம் உண்டு. சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். உற்சாகமான நாள்.
 • விருச்சிகம்
  விருச்சிகம்: தன்னம்பிக் கையுடன் பொதுக் காரியங் களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். மனைவி வழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.
 • தனுசு
  தனுசு: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள்  குடும்ப   சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.
 • மகரம்
  மகரம்: மதியம் 1.00 மணி வரைசந்திராஷ்டமம் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும்.தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலை யில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.
 • கும்பம்
  கும்பம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மதியம் 1.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிதானம் தேவைப்படும் நாள்.
 • மீனம்
  மீனம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்துகொடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here