நாம் கையில் வைத்துள்ளரூபாய் நோட்டுக்கள்அனைத்தும் நல்லநோட்டுக்களா அல்லதுகள்ள நோட்டுக்களாஎன்பதை அறிந்துகொள்ளபுதிய மொபைல் ஆப்ஸ்புழக்கத்திற்கு வந்துவிட்டது. Chkfake ஆப்ஸை உங்கள்மொபைலில் பதிவிறக்கம்செய்து நீங்கள் கையில்வைத்திருக்கும் ரூபாய்நோட்டுக்களை ஸ்கேன்செய்து மிக எளிமையாகசரிபார்க்க முடியும்

உயர் மதிப்புடையநோட்டுக்கள் தான் கள்ளநோட்டுக்கள் அச்சடிக்க மிகஎளிதாக உள்ளதைஅறிந்துகொண்ட மோடிஅரசு கடந்த 2016ஆம்ஆண்டின் இறுதியில் உயர்மதிப்புடைய 500 மற்றும் 1000ரூபாய் நோட்டுக்களைமுற்றிலும் தடை செய்தது.அதற்கு பதிலாக மாறுபட்டவடிவத்தில் 500 மற்றும் 2000ரூபாய் நோட்டுக்களைபுழக்கத்திற்கு விட்டது.

  

புதிதாக புழக்கத்திற்குவிடப்பட்ட 500 மற்றும் 2000ரூபாய் நோட்டுக்களைஅவ்வளவு எளிதில்காப்பியடித்து கள்ளநோட்டுக்கள் அச்சடிக்கமுடியாது என்றும் புதியரூபாய் நோட்டுக்களில்எல்லாம் புதியதொழில்நுட்பம் மற்றும்பாதுகாப்பு அம்சங்கள்உள்ளன என்றும் மோடிஅரசு மார் தட்டிக்கொண்டது.ஆனால் புதிய ரூபாய்நோட்டுக்கள் புழக்கத்திற்குவிடப்பட்ட ஒருவாரத்திலேயே சிலவிஷமிகள், 2000 ரூபாய்நோட்டுக்களை போலியாகஅச்சடித்து புழக்கத்திற்குவிட்டனர்.

கள்ள நோட்டுக்கள்பெரும்பாலும்ஏடிஎம்களிலும், சாதாரணபெட்டிக்கடைகள், பெட்ரோல்பங்க்குகள் மற்றும்மதுபானக்கடைகளில்தான்அதிக அளவில்புழங்குவதாக ரிசர்வ் வங்கிதெரிவித்துள்ளது. நடப்பு2018-19ஆம் ஆண்டில்இதுவரையில் சுமார் 5,22,783நோட்டுக்கள் கள்ளநோட்டுக்கள் என்றுகண்டுபிடிக்கப்பட்டுபறிமுதல்செய்யப்பட்டுள்ளதாகஆர்பிஐ தனதுஅறிக்கையில்தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தாங்கள்பயன்படுத்துவது அசல்நோட்டுக்களா அல்லதுகள்ள நோட்டுக்களாஎன்பதை கண்டுபிடிக்கமுடியாமல்திணறிவருகின்றனர். ஒருசில நிறுவனங்களும்வங்கிகள் மட்டுமே கள்ளநோட்டுக்களைகண்டுபிடிக்கஇயந்திரங்களைப்பயன்படுத்தி வருகின்றன.இவற்றின் விலைஅதிகமாதலால் சாதாரணமக்கள் இவற்றைப்பயன்படுத்துவது என்பதுமுடியாத காரியம்.பொதுமக்களின் ஏக்கத்தைபோக்க தற்போது கள்ளநோட்டுக்களைகண்டுபிடிக்க ஸ்மார்ட்ஃபோன்களில் புதியமொபைல் ஆப்ஸ் வந்துவிட்டது.

கூகுள் ப்ளே ஸ்டோர்ஸில்உள்ள Chkfake என்றஆப்ஸை பதிவிறக்கம்செய்து அதன்மூலம் நாம்வைத்திருக்கும் ரூபாய்நோட்டுக்கள் நல்லநோட்டுக்களா அல்லதுகள்ள நோட்டுக்களாஎன்பதை எளிதாககண்டுபிடிக்க முடியும்.

Chkfake ஆப்ஸை உங்கள்மொபைலில் பதிவிறக்கம்செய்த உடன், நீங்கள்கையில் வைத்திருக்கும்ரூபாய் நோட்டுக்களைஸ்கேன் செய்து மிகஎளிமையாக சரிபார்க்கமுடியும்.

Click here – Chkfake Mobile App – Play Store Download Link…

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here