வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் செய்யும் வகையில் புதிய செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.

டிஜிட்டல் மயத்தை நோக்கி முன்னேறும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இணையதளம் மூலம் செயல்படும் வகையில் இந்த செயலியை உருவாக்கவும், இதன் மூலம் ஒரு வாக்காளர் மாநிலம் விட்டு வேறு மாநிலம் சென்றால் கூட தேர்தல் அலுவலகம் அல்லது வாக்கு மையத்துக்குச் செல்லாமலேயே தனது வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்வது எப்படி?

முதலில் https://nvsp.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்

அதில் தோன்றும் முகப்பு பக்கத்தில் ‘Form 8’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

அதன்பின்னர் தோன்றும் பக்கத்தில் மேல்பகுதியின் வலதுபுறத்தில் மொழியை தேர்வு செய்யும் ஆப்ஷன் இருக்கும். அதில் சென்று தங்களுக்கான விருப்ப மொழியை தேர்வு செய்துக் கொள்ளலாம்.

அதன்பின்னர் தோன்றும் பகுதியில் பெயர், வாக்காளர் பகுதி எண் மற்றும் வாக்காளர் வரிசை எண்ணை நிரப்ப வேண்டும்.

அதன்பின்னர் நீங்கள் திருத்தம் செய்ய விரும்பும்( பெயர், புகைப்படம், முகவரி) உள்ளிட்டவற்றை டிக் செய்ய வேண்டும்.

அதன்பிறகு, சரியான தகவல்களை கவனமாக பதிவு செய்ய வேண்டும்.

தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். ( உதாரணமாக வயது திருத்தம் செய்தால் பள்ளி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும். வீட்டு முகவரியை திருத்தம் செய்தால் மின்கட்டண ரசீது அல்லது ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றவும்).

இறுதியாக ‘Submit Button’-ஐ கிளிக் செய்யவும்.

இவ்வாறு அனைத்தும் முடிந்ததும், திரையில் தோன்றும் எண்ணை(reference number) குறித்துக் கொள்ள வேண்டும். அந்த எண் தான் உங்களின் திருத்தங்களை சரிபார்க்க உதவும்.

இதையடுத்து, மேலும் நீங்கள் திருத்தம் செய்தவற்றை இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரி (https://www.nvsp.in/Forms/Forms/trackstatus)க்கு சென்று சரிபார்த்துக் கொள்ளவும். அல்லது 1950 என்ற உதவி எண்ணை அழைத்து உங்கள் திருத்தங்களை அறிந்துக் கொள்ளலாம். அதற்கு அந்த reference number தேவைப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here