• மேஷம்
  மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள். 
 • ரிஷபம்
  ரிஷபம்: நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதுவேலை அமையும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். உழைப்பால் உயரும் நாள். 
 • மிதுனம்
  மிதுனம்: சவால்கள், விவாதங்களில் வெற்றிபெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை  ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள். 
 • கடகம்
  கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வாகனப் பழுதைசரி செய்வீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள். 
 • சிம்மம்
  சிம்மம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
 • கன்னி
  கன்னி: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளுங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்துபேசாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
 • துலாம்
  துலாம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின்விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி வரும். உத்யோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். இனிமையான நாள்.  
 • விருச்சிகம்
  விருச்சிகம்: உங்களின் முன்னேற்றப் பாதையை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சாதிக்கும் நாள்.  
 • தனுசு
  தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும். நிம்மதி கிட்டும் நாள். 
 • மகரம்
  மகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். முன்கோபத்தால்பகை உண்டாகும். பழையகசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்கவேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
 • கும்பம்
  கும்பம்: தன் பலம், பலவீனத்தை உணருவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள். 
 • மீனம்
  மீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் யோகம் கிட்டும் நாள். 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here