5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு- ஒரு பார்வை
– பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.
2009 கல்வி உரிமை சட்டத்தின்படி 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. அனைவரும் தேர்ச்சி என்பதனை சிலரின் தவறான புரிதலால் படிக்காவிட்டாலும் 8 ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று கூறுகிறார்கள். ஆனால் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி அடைய வைக்கவேண்டும் என்பதே இலக்கு.
இடைநிற்றல் இல்லா தேர்ச்சி மாணவர்களின் மனநிலை தொடர்ந்து படிப்பதற்கான வழிவகைச்செய்யும்.
பொதுத்தேர்வு என்பது எந்தவிதமான கடினபோக்கை கடைபிடிப்பதும் அல்ல. பொதுத்தேர்வு அச்சமும் பயத்தையும் ஒரு சிலரால் பரப்பப்பட்டவை தான்.
மாணவர்களுக்கு எல்லாத் தேர்வுகளும் ஒன்றுதான் பாடத்திட்டங்களும் ஒன்றுதான். எவ்வித மாற்றத்திற்கும் உட்பட்டதல்ல. மாணவர்களை சரிவர கவனிக்கத் தவறுபவர்கள் பொதுத்தேர்வு என்றால் அப்படி இப்படி என்றும் மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்றும் தவறுதலாகச்சொல்லி பயமுறுத்தப்பட்டும் சுய விளம்பரத்திற்காக மாயை உருவாக்கிவிடுகிறார்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைப் பொறுத்தவரை எல்லாத்தேர்வுகளும் ஒன்று தான் அனைவரும் தேர்ச்சிப்பெறும் வகையில் ஆசிரியர்கள் பணியினை சிறப்பாக செய்துவருகிறார்கள். கல்விப்பணித்தவிர (தேர்தல் மற்றும் பேரிடர் பணி நீங்கலாக) மற்றப்பணிகளை ஆசிரியர்களிடம் வழங்குவதைத் தவிர்த்தால் கல்விப்பணித் தடைபடாது.
பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here