பிப்ரவரி் – 21

சர்வதேச தாய்மொழிதினம்
 (International Mother Language Day)
பிப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

சாகித்து மினார்- உயிர்நீத்த மாணவர்களுக்காக டாக்காவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண்

திருக்குறள்

அதிகாரம்:அழுக்காறாமை

திருக்குறள்:166

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்.

விளக்கம்:

பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

பழமொழி

All things come to those who wait

பொறுத்தார் பூமி ஆள்வார்.

இரண்டொழுக்க பண்புகள்

1) அனை‌த்து மக்களும் கடவுளின் சாயலே எனவே அனைவரையும் மதித்து நடப்பேன்.
2) தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நீதி போதனைகளை என்னால் முடிந்த அளவு கடை பிடிப்பேன்.

பொன்மொழி

வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்.!

  – அம்பேத்கர்

பொது அறிவு

1.தொட்டபெட்டா சிகரம் எந்த மலையில் அமைந்துள்ளது?

 நீலகிரி மலை

2.  குற்றால  மலை  எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளது?

 மேற்கு தொடர்ச்சி மலை (திருநெல்வேலி)

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

சோயா

1. எடையைக் குறைப்பதில் சோயாவுக்கு முக்கிய பங்குண்டு. உடலிலுள்ள கெட்ட கொழுப்பை விரட்டுவதில் சோயா உதவும். இதயத்துக்கும் நல்லது. சோயாவிலிருந்து பெறப்படுகிற ப்ரோபயாட்டிக் தயிரில் உள்ள ஈஸ்ட், செரிமானத்துக்கு மிகவும் நல்லது. விளையாட்டு வீரர்களுக்கு புரதத்தின் தேவை அதிகம். அதை ஈடுகட்ட சோயா சிறந்த உணவு.

2. மெனோபாஸ் காலக்கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைய ஆரம்பித்து, சினைப்பைகளின் செயல்திறனும் மங்கும்.

3. வாரத்தில் 5 நாட்கள் சோயா மில்க் எடுத்துக் கொண்டால் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

English words and Meaning

Faggot.   விறகு கட்டு
Fable.     கட்டுக்கதை
Fallacy. தவறான வாதம்,
                 ஏமாற்றுதல்
Fairness.  நேர்மையான,                            பாரபட்சமற்ற
Falter         தயங்குதல்

அறிவியல் விந்தைகள்

*புரதம்*
, புரதம் மனிதனுக்குத் தேவையான முக்கிய உணவு.
*இது உடல் வளர்ச்சிக்கும், குறைபாடுகளை சரி செய்வதற்கும் அவசியம். *செரிமானத்தின் போது வயிற்றில் புரதம் சிறு துகள்களாக உடைக்கப்படுகின்றது. *புரதத்திலிருக்கும் அமினோ அமிலங்கள் உடலுக்கு சத்துணவாகின்றன.

Some important  abbreviations for students

*FIR    –    First Information Report

* FM    –   Field Marshal; Frequency Modulated

நீதிக்கதை

ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.

அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.

மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது.  மனம் பொறுக்காமல் ‘ குரங்காரே..என்னைப்பாரும்…வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன்.  அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உனைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?….

இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்’ என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.

பறவைக்கு அப்போதுதான் புரிந்தது’ அறிவுரைகளைக்கூட…..அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும்  என்று.

துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது.

நாமும்…ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று புரிந்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.

இன்றைய செய்திகள்
21.02.2019

* வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான 3% உள்ஒதுக்கீடு அரசாணை வெளியீடு

* வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதி ஏற்பாடு செய்ய தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

* மத்திய அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட மீன்வளத்துறை செயலாளராக தருண் ஸ்ரீதர் நியமனம்.

* உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுமா? : வரும் 27ம் தேதி நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.

* இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒருநாள் ஆட்டத்தில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது.

Today’s Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸 3% Internal Displacement Government order Issued for Players in Employment

🌸 A meeting of the Chief Electoral Officer has been concluded in order to organize special facilities for differently abled voters in polling booths.

🌸Tarun Sridhar appointed as newly formed Fisheries Secretary by Central Government.

🌸 Will India vs Pakistan teams play in World Cup ? ICC meeting to be held on May 27 and deside

🌸Australia has come to India to play two 20 ODI and 5 ODIs.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here