சமையல் சிலிண்டரில் எரிவாயு அளவை கண்டறிய ஒரு எளிய வழி

இன்றைய காலத்தில் எரிவாயு சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை. மேலும், எரிவாயு தேவை இல்லாத வீடுகளுக்கு அவற்றை வழங்கிட மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சிலிண்டரில் எரிவாயு அளவை கண்டறிய ஒரு எளிய வழி

கேஸ் சிலிண்டர் ஒன்று காலியானதும், அதை ஒதுக்கி விட்டு மற்றொன்றை எடுத்து சமைக்கத் துவங்கி விடுவார்கள். இந்த இடைவேளையிலேயே புதிய கேஸ்க்கு முன்பதிவு செய்து விடுவது பலரது வழக்கம்.

சிலிண்டரில் எரிவாயு அளவை கண்டறிய ஒரு எளிய வழி

பல இடங்களில் முன்பதிவு செய்யப்பட்ட தேதியில் சிலிண்டர் கிடைத்து வருகிறது என்றாலும், காலதாமதமாகிவிட்டால் ஒரு சிலிண்டர் மட்டுமே வைத்துள்ள வீடுகளுக்கு மிகவும் சிக்கலை ஏற்படுத்தி விடும்.
இந்த பிரச்னையை சமாளிக்க சில எளிய வழிகள் உள்ளன. அதனால் கேஸ் சிலிண்டரில் எரிவாயு இருப்பு முன்னரே தெரிந்துவிடுவதுடன், அதற்கு ஏற்றவாறு சிலிண்டரை முன்பதிவு செய்து பிரச்னையிலிருந்து
தப்பித்துவிடலாம்
பொதுவாகவே சிலிண்டர் வாங்கும்போது அதில் எண் இருக்கும். அதிலும் ஏ,பி,சி,டி என போட்டு எண் போடப்பட்டு இருக்கும். இந்த ஏ என்பது ஜனவரி முதல் மார்ச் வரை என்பதைக் குறிக்கும். அதேபோல் பி, சி.டி ஆகியவை அடுத்தடுத்த மூன்று மாதங்களை குறிப்பவை.
இந்த ஆங்கில எழுத்தின் கூடவே ஒரு எண் இருக்கும். அது வருடத்தைக் குறைப்பது. அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் வருட, மாதத்தோடு அந்த சிலிண்டரின் கால அளவு முடிகிறது என்பது இதன் பொருள். அதற்கு மேல் அதை பயன்படுத்தினால் வெடிக்கும் அபாயமும் உண்டு.
இப்போது கேஸ் சிலிண்டரில் இருக்கும் இருப்பை கண்டறிவதற்கான வழிகளை பார்க்கலாம். அதன்படி, முதலில் ஒரு கப்பில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.இந்த தண்ணீரில் உங்களின் விரலை நனைத்து அந்த விரலால் சிலிண்டரின் மேல் கோடுபோட வேண்டும்.
நீளவாக்கில் சிலிண்டர் முழுமைக்கும் அந்த கோடு இட வேண்டும். இப்படிப் போடும் போது காலியாக இருக்கும் சிலிண்டர் பகுதியில் அந்த ஈரக்கோடு விரைவில் காய்ந்து விடும்.
அதேநேரம் கேஸ் இருக்கும் பகுதியில் இந்த கோடு காய நீண்ட நேரம் ஆகும். கொஞ்சம் பொறுமையாக கண்களை சுழல விட்டுப் பாருங்கள். இனி சமைத்துக் கொண்டிருக்கும் போதே கேஸ் காலின்னு ஒரு சிக்கல் வரவே வராது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here