நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) எனப்படும் தேசிய தேர்வு அமைப்பு, உயர்கல்விக்கான தகுதித் தேர்வுகளை நடத்தும் அமைப்பாக விளங்குகிறது. மத்திய மனிதவளத்துறையின் கீழ் செயல்படும் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு பல்கலைக்கழக கல்லூரிகளில் உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர், ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பணி களுக்கு தகுதியானவர்களை நியமனம் செய்ய உதவும் தகுதித் தேர்வாக நெட் எனப்படும் தேசியத் தகுதித் தேர்வை ஆண்டிற்கு இரண்டு முறை நடத்துகிறது. தற்போது உதவி பேராசிரியர் பணிக்கும் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் கல்வி மற்றும் உதவித் தொகை பெற உதவும் ஜூன்-2019 நெட் தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி உள்ளது.
அறிவியல் பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு படித்தவர்கள் இந்தத் தேர்வை எதிர்கொள்ளலாம். கணினி அடிப்படையிலான இந்த தேர்வு வருகிற ஜூன் மாதம் 20,21 மற்றும் 24 முதல் 28-ந்தேதிவரை நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு வருகிற மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது, மார்ச் 30-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஹால்டிக்கெட் மே 15-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்ய முடியும். தேர்வு முடிவுகள் ஜூலை 15-ந் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நெட் தேர்வுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் இணைய தளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டு உள்ளது. விரிவான விவரங்களை www.ugcnetonline.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here