தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருதுகளுக்கு தனிநபர், கல்வி நிறுவனங்கள் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி, விழிப்புணர்வு, பாதுகாப்பு,  மேலாண்மை, ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடும் கல்வி நிறுவனங்கள், தனிநபர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு 2018-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்பட உள்ளன. சுற்றுச்சூழல் குறித்த சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரையாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
விண்ணப்பம் விநியோகம்: இதற்கான விண்ணப்பங்கள் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் துறை இயக்குநர் அலுவலகத்தில் பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை அலுவலக நாள்களில்  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். மேலும், www.environment.tn.nic.in  என்ற இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை இயக்குநர், தரைத் தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை-15 என்ற முகவரிக்கு ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். இந்த விருதுக்கான தகுதி, விதிகளுக்கு  www.environment.tn.nic.in  இணையதள முகவரி அல்லது 044 24336421 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here