திருக்குறள்

அதிகாரம்:அழுக்காறாமை

திருக்குறள்:164

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து.

விளக்கம்:

பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்.

பழமொழி

Cowards die many  times before their death

வீரனுக்கு ஒருமுறை சாவு; கோழைக்கு தினம்தோறும் சாவு.

இரண்டொழுக்க பண்புகள்

1) அனை‌த்து மக்களும் கடவுளின் சாயலே எனவே அனைவரையும் மதித்து நடப்பேன்.
2) தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நீதி போதனைகளை என்னால் முடிந்த அளவு கடை பிடிப்பேன்.

பொன்மொழி

மனித முயற்சியில் தவறு ஏற்படுவது இயல்பே. ஆனால் அதை திருத்திக் கொள்வதே மனிதனுக்கு அழகு.

      – பாரதியார்

 பொது அறிவு

1.டீசல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?
 ருடால்ஃப் டீசல்

2. காற்றழுத்த சக்கரத்தை கண்டுபிடித்தவர் யார்?
   ஜான்  டன்லப்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

புடலங்காய்

1.டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்தது. எடை அதிகரிக்காமலும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்க உதவுகிறது.

2. காய்ச்சல் உள்ளவர்கள் புடலங்காயைக் கொதிக்க வைத்த டிகாக்‌ஷனை கொடுத்தால் ஒரே இரவில் காய்ச்சல் தணிந்து, உடல்நலம் இயற்கையாக சீராகத் தொடங்கும்.

3.அதிக நீர்ச்சத்துள்ள காரணத்தினால், உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது இது. வெயில் நாட்களில் புடலங்காயை உண்பதன் மூலம் வெம்மையின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

4. ஆலோபேஷியா எனப்படுகிற புழுவெட்டால் பாதிக்கப்பட்டு, முடியை இழப்போருக்கு புடலங்காய் இழந்த முடியை மீட்டுத் தரும்.

5.இதிலுள்ள அதிகப்படியான தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கக்கூடியவை. பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.

English words and Meaning

Draft. குறி, எழுது ,திட்டக்குறிப்பு
Dormitory.  ஒய்வெடுக்கும் அறை
Dogmatic.  கர்வம் நிறைந்த
Dynamic சுறுசுறுப்பான
Duplicity. ஏமாற்றுதல்

அறிவியல் விந்தைகள்

*முதுகெலும்பிகள்*
*முதுகெலும்பிகள்
(Vertebrate)  அல்லது முள்ளந்தண்டுளிகள் எனப்படுவை முதுகெலும்பு அல்லது தண்டு வடத்தினைக் கொண்டிருக்கும் விலங்குகளைக் குறிக்கும்.
*இதுவரை 57,739 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. *இவை 530 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து படிவளர்ச்சி அடையத் (பரிணமிக்கத்) தொடங்கின என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். *மீன்கள், நிலநீர் வாழ்வன அல்லது இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் ஆகியன முதுகெலும்பிகள் வகையில் அடங்கும்.

Some important  abbreviations for students

* ERNET    –   Educational and Research Network

* etc.     –    et cetera (and other things)

நீதிக்கதை

ஜானகி ஆன்ட்டி ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த ப்ளம்ஸ் பழங்களை வாங்கினாள். ஆன்ட்டிக்கு நான்கு குழந்தைகள். கோபு பாபு, சிட்டு, பட்டு என்று அவர்களுக்குப் பெயர். குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பழங்களைத் தரலாம் என்று ஆன்ட்டி நினைத்தாள்.

பழங்கள் மேஜைமீது ஒரு தட்டில் இருந்தன. பட்டுக்குட்டி இதுவரை ப்ளம்ஸ் பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. ஆசையோடு அவற்றை வாசனை பார்த்தாள். அந்த வாசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பழத்தைத் தின்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டாயிற்று.

அறையில் யாருமில்லாதபோது ஒரு பழத்தை எடுத்துத் தின்றுவிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு ஜானகி ஆன்ட்டி பழங்களை எண்ணிப் பார்த்தாள். ஒன்று குறைந்தது.

“மைடியர் சில்ட்ரன். ஒரு ப்ளம்ஸ் பழம் குறைகிறது. யாராவது சாப்பிட்டீர்களா?” என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டாள்.

“நான் இல்லை”, “நான் இல்லை” என்று எல்லோரும் சொன்னார்கள். பட்டுக்குட்டியும் அவர்களோடு சேர்ந்து “நான் தின்னவில்லை” என்று சொன்னாள்.

“ஓகே……..யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ப்ளம்ஸ் பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத் தெரியாமல் அந்தக் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக ப்ளம்ஸ் மரம் முளைத்துவிடும். அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது” என்றாள் ஜானகி ஆன்ட்டி.

பட்டுக்குட்டி பயந்துபோய், “இல்லை, நான் கொட்டையை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டேன்” என்று கூறி அழத் தொடங்கினாள்.

“பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா? இனிமேல் பொய் சொல்லக்கூடாது……….என்ன?” என்று பட்டுக்குட்டியை சமாதானப்படுத்தினாள் ஜானகி ஆன்ட்டி.

இன்றைய செய்திகள்
19.02.2019

* தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவைரத்து செய்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கத் தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* டெல்லியில் தமிழர்களுக்காக கல்லூரி தொடங்க தமிழக அரசு ஆலோசனை: தமிழ்நாடு இல்லத்தில் தமிழகத்தின் பேராசிரியர்களுடன் கூட்டம்.

* இந்திய விமானப் படை வரலாற்றில் முதன்முறையாக ஹினா ஜெய்ஸ்வால் என்ற பெண் முதல் விமானப் பெண் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் நடைபெற்றும் வரும் தேசிய ஜூனியர் ஆக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.

* சென்னையில் 6வது தேசிய ஓபன் நடைப்பந்தயம் சாம்பியன்ஷிப் போட்டி : பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு.

Today’s Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸 The Supreme Court has ordered the ban on the opening of the Tuticorin Sterlite plant by order of the National Green Tribunal.

🌸Tamil Nadu Government to start college for Tamilans ​​in Delhi: Meeting with professors of Tamil Nadu in Tamil Nadu home,Delhi

🌸Hina Jaiswal, the first woman in the history of the Indian Air Force, has been appointed as the first woman engineer.

🌸Tamil Nadu team won the first match of the National Junior Hockey series in Aurangabad, Maharashtra.

🌸 6th National Open walking Championship  in Chennai: Participants from various countries participated

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here