SCIENCE DOSE : பூமி சுழல்வதை நம்மால் ஏன் உணர முடியவில்லை?

பூமி சுழல்வதை நம்மால் ஏன் உணர முடியவில்லை, டிங்கு?
 –பி. நித்யா, 8-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பல்ளி, வெளியகரம்.
விமானத்திலோ காரிலோ பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பயணம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் வாகனம் ஓடுவதை நம்மால் உணர முடியாது. வேகத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே அதை உணர்ந்துகொள்ள முடியும். அதேபோலதான் பூமியும். மணிக்கு 1,000 மைல் வேகத்தில் பூமி சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்த வேகம் நிலையானது. அதனால் பூமி சுற்றுவதை நம்மால் உணர முடியவில்லை. பூமி சுற்றும் வேகத்தில் பெரிய அளவில் மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே நம்மால் உணர முடியும், நித்யா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here