*நீதிமன்றத்தில் காலியாக உள்ள 74 பணிக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்*

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சிறுவழக்குகள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 74 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் இணையத்தில் வெளியிட்டப்பட்டுள்ளன. சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு உள்ளிட்ட சிறுவழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்றத்தில் தினசரி 100கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் நீதிமன்றத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சு(7), தட்டச்சு(9), இளநிலை உதவியாளர்(6) ஆகிய பணிகளுக்கு தற்காலிகமாகவும். முதுநிலை அமினா(4), இளநிலை அமினா(6), பிராசஸ் எழுத்தர்(3), அலுவலக உதவியாளர்(38) மற்றும் காவலர்(1) ஆகிய பணிகள் நிரந்தரமாகவும் என மொத்தம் 74 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல்கள் www.ecourts.gov.in/tn/chennai என்ற

http://www.ecourts.gov.in/tn/chennai

இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சமர்பிக்க மார்ச் 8ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here