• மேஷம்
  மேஷம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.
 • ரிஷபம்
  ரிஷபம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
 • மிதுனம்
  மிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பிபொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
 • கடகம்
  கடகம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
 • சிம்மம்
  சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
 • கன்னி
  கன்னி: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். மனதிற்கு இதமான செய்தி வரும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை மேலதிகாரி பாராட்டுவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
 • துலாம்
  துலாம்: கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை சிந்தனை பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். 
 • விருச்சிகம்
  விருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்துப் போகும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும்.
 • தனுசு
  தனுசு: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகனப்பழுதை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
 • மகரம்
  மகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாகும்.வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.
 • கும்பம்
  கும்பம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்றுமுடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள்.
 • மீனம்
  மீனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here