புதுக்கோட்டை  மாவட்டத்தில் இம்பார்ட் ஆய்வுக்கட்டுரைத் திட்டத்தின் கீழ்  மாநிலப்போட்டிக்கு தேர்வு பெற்ற 5பள்ளிகளின் குழுவினருக்கு முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பாராட்டுச்சான்றிதழ் மற்றும்  கேடயங்களை வழங்கி பாராட்டு. 

புதுக்கோட்டை,பிப்,15-         புதுக்கோட்டை மாவட்டத்தில் இம்பார்ட் ஆய்வுக்கட்டுரைத்திட்டத்தின் கீழ் மாநிலப்போட்டிக்கு பாடவாரியாக 5பள்ளிகளின் குழுவினர் சமர்பித்த 5ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. அதனைதொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி மாநிலப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட இம்பார்ட் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்த குழுவினருக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டிப்பேசினார்.                      

இம்பார்ட் ஆய்வுக்கட்டுரை           புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின் மூலம் 9- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இம்பார்ட் ஆய்வுக்கட்டுரை சமர்பித்தல் தொடர்பான மாவட்ட அளவிலான மாநாடு புதுக்கோட்டை லேணா விளக்கு மெளண்ட்சீயோன் பொறியியல்  மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் பாடவாரியாக தமிழ்பாடத்தில் நெடுவாசல் அரசுமேல்நிலைப்பள்ளி குழுவினரும்,ஆங்கிலப்பாடத்தில் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி குழுவினரும், கணிதப்பாடத்தில் கே.வி.கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி குழுவினரும், அறிவியல் பாடத்தில் குளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி குழுவனரும்,சமூக அறிவியல் பாடத்தில் புத்தாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி குழுவினரும் தேர்வு செய்யப்பட்டு மாநிலப்போட்டிக்கு தகுதி பெற்றன. புதுக்கோட்டை மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட 5அணியினரும் வருகிற 19( செவ்வாய்கிழமை),20(புதன்கிழமை)ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் அதாவது மாநில மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.

 

 அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு. நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமைதாங்கி  வெற்றிபெற்ற ஆய்வுக்கட்டுரைகள் சமர்பித்த குழுவினருக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி  மாநில அளவிலும் வெற்றி பெற பாராட்டி பேசினார்.இந்த நிகழ்ச்சியில் மெளண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் இயக்குநர் ஜெய்சன்ஜெயபரன்,கல்லூரியின் முதல்வர் பாலமுருகன்,இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் க. குணசேகரன்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின் மாவட்ட. உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர்  சி.பழனிவேலு ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற குழுவினரை வாழ்த்தி பேசினார்கள். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும்  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். நிறைவாக கல்வி மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் இராஜா நன்றி கூறினார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here