• மேஷம்
  மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின்நட்பு கிடைக்கும். புது  ஏஜென்சிஎடுப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.   
 • ரிஷபம்
  ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோ
  கத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள். 
 • மிதுனம்
  மிதுனம்:  ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். நீங்கள் ஒன்று பேசப்போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப்புரிந்துக் கொள்வார்கள். கூடாப்பழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். 
 • கடகம்
  கடகம்: திட்டமிட்ட காரியங் களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேசாதீர்கள். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து போங்கள். போராடி வெல்லும் நாள்.  
 • சிம்மம்
  சிம்மம்: எதையும் சமாளிக் கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். புகழ், கௌரவம் கூடும் நாள். 
 • கன்னி
  கன்னி: சொன்ன சொல்லைக்காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத்தொடங்குவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். சாதிக்கும் நாள். 
 • துலாம்
  துலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும்.உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.     
 • விருச்சிகம்
  விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவு களைக் குறைக்க முடியாமல்திணறுவீர்கள். குடும்பத்தினர்சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப் போது சிக்கித் தவிப்பீர்கள். உத்யோகத்தில்
  அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
 • தனுசு
  தனுசு: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்தநல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் மகிழ்ச்சிதங்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.  
 • மகரம்
  மகரம்: இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதர
  வால் நினைத்ததை முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். 
 • கும்பம்
  கும்பம்:  குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோ
  கத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.      
 • மீனம்
  மீனம்: எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்லவரன்அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள். 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here