உணவின் வாசனையை அதிகரிக்கத்தான்கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர்கருதுகின்றனர். இதனால் தான்சாப்பிடும்போது உணவில் கிடக்கும்கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டுவிடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச்செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில்பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாகசமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. கறிவேப்பிலையின்தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. 
      இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தைசேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன.மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக்,குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான்சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன்,புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள்உள்ளது. 
      இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனியமணத்தை தருகிறது. பல மருத்துவகுணங்களையும் வெளிப்படுத்துகிறது.இந்திய சமையலில் வாசனைக்குசேர்க்கப்படும் மசாலா அயிட்டமானகறிவேப்பிலை புற்றுநோயைஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல்உடையது என்பதை அண்மையில்ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள்கண்டறிந்துள்ளனர். நியூட்ரிசன் சைன்டிஸ்ட்ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின்மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்.மசாலாப் பொருட்கள் நல்ல வாசனைஉடையது மட்டுமல்ல அது பல மருத்துவகுணங்களை கொண்டது என்பதைஅந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவனதலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக்கறிவேப்பிலை சிறந்த ஆண்டிஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார்.இது புற்றுநோய், இதய நோய்களைகுறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும்கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில்கிடைக்கிறது என்கிறார் இவர். 
               கறிவேப்பிலையிலிருந்து எண்ணைஎடுத்து அதை நுரையீரல், இருதயம்,கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும்எண்ணையாக பயன்படுத்தலாம் எனஇங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையைஅரைத்து சாற்றை எடுத்து 100 கிராம்தேங்காய் எண்ணையில் கலந்து இதமானசூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சிதினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல்உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது.கண்பார்வை குறைவு ஏற்படாது. 
      கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால்நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்தசம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும்என்கிறது இந்நிறுவனம்.திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர்சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும்தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மைஉண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள்மருத்துவ குழுவினர். அதில்கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமதுதிசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறதுஎன்பது தெரிய வந்தது. மேலும்பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது.பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ.பாதிக்கிறது…
               செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது.விளைவு கேன்சர், வாதநோய்கள்தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போதுநாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும்,கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதைதடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில்10 கறிவேப்பிலை இலையையும், மாலையில்10 இலையையும் பறித்த உடனேயே வாயில்போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால்மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாககுறைத்து விடலாம் என்கிறார்கள்மருத்துவர்கள். 
               தினசரி வெறும் வயிற்றில்கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள்சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல்கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில்சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடைசெய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில்இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவைபெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையைபச்சையாகவே மென்று தின்றால் குரல்இனிமையாகும். சளியும் குறையும்என்கிறார்கள் மருத்துவர்கள். இந்தியன்கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம்காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 
75 – 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசுசெய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிடமுக்கியமான 10 காய்கறிகளையும்குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலைஎன்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here