கண்டிக்க முடியாத ஆசிரியர் நிலை !
கவலைக்கிடமாகும் மாணவர் எதிர்காலம்!
எங்கேபோகிறது எதிர்கால கல்வி?

அடிதடி கலாச்சாரம், வன்முறையெல்லாம் கல்லுரிகளில்தான் அரங்கேறும்.ஆனால் இப்போது எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே தொடங்கிவிட்டது. தற்போது தண்டிக்கும், கண்டிக்கும் அதிகாரமில்லாத ஆசிரியர்ளால் மாணவர்களிடையே நல்லொழுக்கத்தை கொண்டுவர சிரமப்படுகின்றனர் .

அன்பாக பேசி,பழகி என்பதெல்லாம் அனைவராலும் செய்ய முடிவதில்லை. அப்படியே செய்தாலும் அதை ஏற்கும் பக்குவம் தற்போதைய மாணவர்களிடையே குறைநை்து போய்விட்டது. காரணம் நன்னெறிகளை போதிக்கும் கல்வி தற்போது இல்லை. டிவி,சினிமா,செல்போன் போன்றவற்றில் தங்கள் வாழ்க்கையை சுருக்கி கொண்டுவிட்டனர் தற்போதைய மாணவர்கள்.
வகுப்புகளை புறக்கணித்து, வெளியே சுற்றும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, பள்ளி ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

80 சதவீத அரசு பள்ளிகள், கிராமப் புறங்களில் அமைந்துள்ளன. வீட்டில் இருந்து பள்ளி கிளம்பும் மாணவர்கள், சில நேரங்களில் வகுப்புகளுக்கு செல்லாமல் வெளியே சுற்றுவதுண்டு. அவ்வாறு சுற்றும் மாணவர்கள் எண்ணிக்கை, அதிகரித்துக் கொண்டே உள்ளது.
அரசு பள்ளிகளில் மொத்த மாணவர்களில், 10 சதவீதத்தினர் வகுப்புகளுக்கு சரிவர வருவதில்லை என ஆசிரியர்கள் கூறுகின்றனர். வகுப்புக்கு வராத மாணவர்களிடம் ஆசிரியர்கள் கண்டிப்பு காட்ட தயங்குகின்றனர். இதுகுறித்து பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வு இல்லாதது, முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

கண்டிக்கவும் முடியாமல் தண்டிக்கவும் முடியாமல் பெற்றோர்களை அழைத்து வர சொல்கின்றனர் ஆனால் மாணவர் சேர்க்கையின்போது பள்ளிக்கு வரும் பெற்றோர், அதன்பின் அவ்வப்போது வகுப்பு ஆசிரியரை சந்திப்பதில்லை.ஆசிரியர் – பெற்றோர் இடைவெளியால், வகுப்புகளை புறக்கணிக்கும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது, ஆசிரியர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வெளியே சுற்றித்திரியும் அவர்களை, சில நேரங்களில் ஆசிரியர்கள் தேடிப்பிடித்து, பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.

மாணவர்களிடையே வன்முறையை கையாலும் சில மாணவர்கள் ஆசிரியர்களையும் தாக்குகின்றனர்.இதற்கு ஒருசில பெற்றோர்களும் ஆதரவளிப்பதுதான் உச்சகட்ட கொடுமை.

ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “சீருடை அணிந்து வெளியே சுற்றும் மாணவர்களுக்கு அசம்பாவிதம் நிகழ்ந்தால், அதற்கு ஆசிரியர்களே பொறுப்பாக வேண்டியுள்ளது. கல்வி, நல்லொழுக்க பண்புகளை மாணவர்களிடம் கொண்டு செல்வதில், ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here