*அறிக்கை*
*13.02.2019*

*மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்*
==================

22 1 2019 அன்று முதல் ஜாக்டோ ஜியோ எதிர்கால வாழ்வாதாரம் கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது

மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் பின்பு பிணையில் வந்தனர் அதன்பின்பு உயர்நிலை மேல்நிலை ஆசிரியர்கள் 1111 பேரை துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்தனர்

இன்று (13.02.2019) அனைவரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்ட *மாண்புமிகு தமிழக முதல்வர்* அவர்களுக்கும் *மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்* அவர்களுக்கும் மற்றும் மாண்புமிகு மாநில *எதிர்க்கட்சித் தலைவர்* அவர்கள் அறிவுறுத்தலின் பெயரில் சட்டமன்ற உறுப்பினரும் *முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு* அவர்கள் சிறப்பு கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான பணியிடை நீக்கம் மற்றும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் அதனடிப்படையில் பணியாளர் சீர்திருத்த அமைச்சரும் மீன்வளத் துறை அமைச்சருமான மாண்புமிகு *ஜெயக்குமார்* அவர்கள் பதிலளிக்கையில் அனைத்து ஒழுங்கு நடவடிக்கை களையும் ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்று அறிவித்தார் அவர்களுக்கும்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

அதேவேளையில் அரசு ஊழியர்கள் மீதான பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து உதவிட *மாண்புமிகு தமிழக முதல்வர்* அவர்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன

*சா அருணன்*
*நிறுவன தலைவர்*
*தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here