இன்றையகாலத்தில்பெரும்பாலும்வரும் இதயநோயானமாரடைப்புஏற்பட பலகாரணங்கள் இருக்கின்றன. ஆனால்அத்தகைய காரணங்களில் ஒன்று தான்உண்ணும் உணவுகள். ஏனெனில் உண்ணும்உணவுகளில் ஒரு சில உணவுகள்இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 

    

   மேலும் எந்த உணவுகளால் இதயத்திற்குபாதிப்பு ஏற்படுகின்றது என்றும்மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர். அதிலும்ஏற்கனவே இதயத்தில் பாதிப்பு இருப்பவர்கள்,அத்தகைய இதயத்திற்கு பாதிப்பைஏற்படுத்தும் உணவுகளை உண்ணாமல்தவிர்ப்பது நல்லது. மேலும் ஆரோக்கியமாகநீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்றால்,இப்போது கூறும் உணவுகளை அதிகம்உண்ணாமலும், உடலில் கலோரிகள் 2000மேல் இல்லாமலும் பார்த்துக் கொள்ளவேண்டும். அதிலும் டயட்டில் ஆரோக்கியமானஉணவுகளை மட்டும் சேர்த்து வர வேண்டும்.இப்போது எந்த உணவுகள் மாரடைப்பைஏற்படுத்தும் என்று பார்ப்போமா!!!

       சீஸ் மற்றும் வறுத்த உணவுகள்: அடிக்கடிபசி எடுக்கும் போது வெளியே எங்கேனும்சென்றால், சீஸ் அதிகம் பயன்படுத்தும்உணவுகள், எண்ணெயில் வறுத்த உணவுகள்என்று தான் சாப்பிடத் தோன்றும். ஆனால்அவ்வாறு சாப்பிட்டால், அதில் உள்ள கெட்டகொழுப்புக்கள், உடலில் சேர்ந்து இரத்தத்தில்கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடும். இதனால்தமனிகளில் கொழுப்புக்கள் சேர்ந்துஅடைப்புகளை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், வேறு பல இதயநோய்கள், ஏன் மாரடைப்பு கூட ஏற்படும்வாய்ப்புள்ளது. ஆகவே அப்போது சூப்வகைகளில் ஏதேனும் சாப்பிட்டால், உடல்ஆரோக்கியமாக இருக்கும்.

ஆல்கஹால்

     ஆல்கஹாலில் ஒன்றான ரெட் ஒயினைஅவ்வப்போது ஒரு டம்ளர் சாப்பிட்டால்,மாரடைப்பை தடுக்கலாம் என்று பலஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆனால் அதையே அதிகமாக சாப்பிட்டால்,அதற்கான எதிர்பலன் தான் கிடைக்கும்.ஏனெனில் பொதுவாக மாரடைப்பிற்குஆல்கஹாலும் ஒரு பெரும் காரணம். அதுஇதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.ஆகவே தான், அதிக அளவில் ஆல்கஹால்அருந்துபவருக்கு விரைவில் இரத்த அழுத்தம்ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அவைமாரடைப்பிற்கும் வழிவகுக்கிறது.

சைனீஸ் உணவுகள்

    சைனீஸ் உணவுகளில் அதிகமான அளவில்இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும்பொருட்களை சேர்க்கின்றனர். அதனால் தான்சைனீஸ் உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டாம் என்று கூறுகின்றனர். அதிலும்அந்த உணவுகளில் அஜினோமோட்டோமற்றும் சோயா சாஸ் என்னும் இதயத்திற்குபாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களையும்சேர்க்கின்றனர். 

   மேலும் உடலில் 1500 மில்லி கிராம் சோடியம்இருப்பது இதயத்திற்கு பெரும் பாதிப்பானது.அத்தகைய அளவு சோயா சாஸில்இருக்கிறது. சைனீஸ் உணவுகள் அதிகசுவையுடன் இருப்பதற்கு அந்த சோயா சாஸ்தான் காரணம். ஏனெனில் அதனை அளவுக்குஅதிகமாக பயன்படுத்துகின்றனர். இதனால்உடல் ஆரோக்கியம் பாதிப்பதோடு, இதயநோயும் ஏற்படுகிறது.

அதிகமான கிளிசரின் உணவுகள்:

      கார்ன் ப்ளேக்ஸ் மற்றும் வெள்ளைபிரட்களில் அளவுக்கு அதிகமான அளவில்கிளிசரின் கார்போஹைட்ரேட் இருக்கிறது.இதனை அதிகமான அளவில் சாப்பிடுவதால்,இதயம் பாதிக்கப்பட்டு, மாரடைப்புஏற்படுகிறது. ஆகவே இதனை இதய நோய்இருப்பவர்கள், முற்றிலும் சாப்பிடாமல்தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் குறைந்தஅளவில் உட்கொண்டால் போதுமானது.

சர்க்கரை

     சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளைஉண்பதும் இதயத்திற்கு சரியானதல்ல.ஏனெனில் அவை இரத்தத்தில் உள்ளசர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவைஏற்படுத்தும். மேலும் இதில் உள்ளபொருட்களும் மாரடைப்பிற்கு வழிவகுக்கும்.

ஆகவே மேற்கூறிய உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால்,உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் ஆரோக்கியமானமாக இருக்கும்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here