நமது உடம்பில் ஒரு சுரப்பி உள்ளது. அது சுரக்கும் ஒரு நீரைக் கொண்டு உலகத்தில் உள்ள அனைத்து நோய்களைக் குணப்படுத்தலாம். அந்த சுரப்பியின் பெயர் எலும்பு மஜ்ஜைகள். அது சுரக்கும் நீரின் பெயர் சுத்தமான “இரத்தம்”. இரத்தத்தில் எல்லாப் பொருளும் நல்ல பொருளாக தேவையான அளவு வைப்பதே இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி.
           இரத்தத்தில் எத்தனை பொருள் இருக்கிறது? அவை என்னனென்ன என்பதைப் பார்ப்போம். இரத்தத்தில் மொத்தம் நிறைய பொருள் இருக்கிறது. ஆனால் அதை ஐந்து வகையாக சுலபமாகப் பிரிக்கலாம். அவை நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்.
1. நிலம் [உணவு] [மண்]
          நாம் சாப்பிடும் உணவு இரத்தமாக மாறுகிறது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அப்படிக் கிடையாது. சாப்பிடுகிற உணவு வாயில், வயிற்றில் குடலில் ஜீரணமாகி அதில் உள்ள சத்து பொருட்கள் இரத்தத்தில் கலக்கின்றன. இரத்தம் என்பது உணவு மட்டும் கிடையாது. உணவு நேரடியாக இரத்தமாக மாறுவது கிடையாது. உணவு இரத்தத்தில் சில பொருட்களைக் கலக்கிறது. இது மண் சம்பந்தப் பட்ட பொருள்கள். நாம் சாப்பிடுகிற உணவில் சர்க்கரை, புரோட்டீன், விட்டமின், மினரல் போன்ற பொருள்கள் உள்ளது. இவை மண் சம்பந்தப்பட்ட பொருள்கள் எனப்படும்.
2. காற்று
            உணவே மருந்து, மருந்தே உணவு என்று கூறுவார்கள். உண்மை. உணவு மருந்தாகச் செயல்படும். ஆனால் உணவு மட்டுமே மருந்தாகச் செயல்படாது. உணவை சரியான முறையில் ஜீரணம் செய்வதால் நோய்கள் குணப் படுத்தலாம். ஆனால் முழுமையாகக் குணப்படுத்த முடியாது. உணவு மட்டுமே மருந்து என்று கூறினால் உணவை மட்டும் சரியாக சாப்பிட்டு விட்டு மூக்கை அடைத்து வைத்துக் கொண்டால் உயிரோடு இருக்க முடியுமா? உணவு மூன்று வேளைதான் சாப்பிடுகிறோம். ஆனால் காற்று 24 மணி நேரமும் சுவாசிக்கிறோம். எனவே காற்றும் ஒரு மருந்து தான். காற்றில் உள்ள ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற காற்று சம்பந்தப்பட்ட பொருள்கள் மூக்கின் வழியாக நுரையீரலுக்குச் சென்று நுரையீரலின் வழியாக இரத்தத்தில் கலக்கின்றன. எனவே இரத்தத்தில் காற்று சம்பந்தப்பட்ட பொருள்கள் காற்று வழியாக கலக்கின்றன.
3. நீர்
         நாம் குடிக்கும் நீரில் உள்ள சத்துப் பொருள்கள் சிறுநீரகம் பிரித்து இரத்தத்தில் கலக்கிறது. இவை நீர் சம்பந்தப்பட்ட பொருள்கள் என்று பெயர். எனவே குடிக்கும் தண்ணீரின் மூலமாக இரத்தத்தில் நீர் சம்பந்தப்பட்ட பொருள்கள் கலக்கின்றன. தண்ணீர் குடிக்காமல் நாம் உயிர் வாழ முடியுமா? எனவே தண்ணீரும் மருந்துதான். அதைப் பற்றியும் யோசிக்க வேண்டும்.
4. ஆகாயம் [தூக்கம்]
        நான்கு நாள் தூங்காமல் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியுமா? எனவே தூக்கமும் ஒரு மருந்து. தூக்கத்தின் மூலமாக ஆகாய சக்தி எனப்படும் காலியிடம் இரத்தத்தில் கலக்கிறது. உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களிலும் காலி இடம் இருக்கும். இரும்பில் கூட காலியிடம் இருக்கும். ஆனால் அது கண்ணுக்குத் தெரியாது. அதே போல் ஆகாய சக்தி என்ற காலியிடம் இரத்தத்தில் இருக்கிறது. இது குறையும் பொழுது நமக்கு தூக்கம் வரும். தூங்கினால் இது அதிகரிக்கும். அதிகரித்தால் நமக்கு சக்தி கிடைக்கும். எனவே தூக்கமும் ஒரு மருந்து. தூங்காமல் உலகத்தில் யாரும் உயிரோடு இருக்க முடியாது. எனவே தூக்கத்தின் மூலமாக இரத்தத்திற்கு ஆகாய சக்தி என்கிற சக்தி கிடைக்கிறது.
5. நெருப்பு [உழைப்பு]
        இரத்தத்திற்கு சூடு தேவைப்படுகிறது. இரத்தம் சூடாக இருந்தால் தான் வீரியம். நாம் கை, கால் அசைப்பதன் மூலமாக உடலில் உள்ள தசைகளுக்கும் எலும்புகளுக்கும் அசைவுகள் என்ற உடல் உழைப்பைக் கொடுப்பது மூலமாக அது இயக்க சக்தியாக மாறி வெப்பசக்தியாக மாறி இரத்தத்தில் கலக்கிறது. நாம் உடலில் எந்த அசைவும் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் உடல் முழுவதும் கொப்பளங்களும் புண்களும் வரும். உடலில் அசைவுகள் இருக்க வேண்டும். நாம் உழைக்க வேண்டும். உழைப்பு என்ற இயக்கம் இரத்தத்திற்கு உஷ்ணத்தைக் கொடுக்கிறது. நாம் குழந்தையாக இருக்கும் போது ஏன் ஒரு இடத்தில் அமராமல் ‘துரு துரு’ வென ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டேயிருக்கிறோம். இரத்தத்தில் சூடு இருந்தால் நம்மால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்போம்.
        இரத்தத்தில் உள்ள சூடுதான் ஒருத்தருடைய சுறுசுறுப்புக்கு ஆதாரம். சிலர் கூறுவார்கள் நீ சின்ன பையன், இள இரத்தம். இரத்தம் சூடாக இருக்கிறது. அதனால் தான் நீ வேகமாக இருக்கிறாய். அமைதியாக இரு என்று கூறுவார்கள். நமக்கு 80 வயது 100 வயது ஆனாலும் இரத்தத்தை சூடாக வைத்திருப்பது எப்படி என்ற இரகசிய வித்தை தெரிந்திருந்தால் 100 வயதிலும் நாம் குழந்தையைப் போல சுறுசுறுப்பாக இருக்கலாம். எனவே உடல் உழைப்பு மூலமாக நமது இரத்தத்திற்கு நெருப்பு சக்தி கிடைக்கிறது.
              சாப்பிடும் உணவு மூலமாக இரத்தத்திற்கு மண் சம்பந்தப்பட்ட பொருள் கிடைக்கிறது, குடிக்கும் நீர் மூலமாக நீர் சம்பந்தப்பட்ட பொருள் கலக்கிறது. சுவாசிக்கும் மூச்சுக்காற்று மூலமாக காற்று சம்பந்தப்பட்ட பொருள் கலக்கிறது. தூக்கத்தின் மூலமாக ஆகாயம் சம்பந்தப்பட்ட பொருள் கலக்கிறது. உழைப்பின் மூலமாக நெருப்பு சம்பந்தப்பட்ட பொருள் கலக்கிறது. ஆக மொத்தம் இரத்தத்தில் மொத்தம் ஐந்து வகையான பொருள்கள் உள்ளது. அவை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகும்.
                    எனவே நாம் சாப்பிடும் சாப்பாட்டை எப்படி நல்ல முறையில் ஜீரணம் செய்து நல்ல பொருள்களாக இரத்தத்தில் கலக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்வது முதல் இரகசியம். குடிக்கும் நீரை எப்படிக் குடித்தால் நீரில் உள்ள பொருள்கள் நல்ல முறையில் ஜீரணமாகி இரத்தத்தில் கலக்கும் என்பதைத் தெரிந்து கொள்வது இரண்டாவது இரகசியம். சுவாசிக்கும் காற்றை எப்படி சுவாசித்தால் காற்றில் உள்ள பொருள்கள் நல்ல பொருளாக இரத்தத்தில் கலக்கும் என்பதைக் கற்றுக் கொள்வது மூன்றாவது இரகசியம். நமது தூக்கத்தை எப்படி ஒழுங்கு செய்தால் தூக்கம் மூலமாகக் கிடைக்கும் ஆகாய சம்பந்தப்பட்ட பொருள்கள் நல்ல பொருள்களாக இரத்தத்தில் கலக்கும் என்பதை கற்றுக் கொள்வது நான்காவது இரகசியம்.
உடல் உழைப்பு நமக்கு எவ்வளவு தேவை எப்படி உழைக்க வேண்டும் என்பது, உழைப்பின் மூலமாக இரத்தத்திற்கு, நெருப்பு சம்பந்தப்பட்ட பொருளை நல்ல முறையில் எப்படிக் கலப்பது என்பதைத் தெரிந்து கொள்வது ஐந்தாவது இரகசியம்.
இப்படி உணவு, காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பொருள்களையும் இரத்தத்தில் தேவையான அளவு தரமான பொருளாகக் கலப்பது என்ற ஐந்து இரகசியங்களைத் தெரிந்து கொண்டு அதைக் கடைப்பிடித்தால் இரத்தத்தில் எல்லாப் பொருளும் நல்ல பொருளாக தேவையான அளவு இருக்கும்.
          இரத்தத்தில் எல்லாப் பொருளும் தேவையான அளவு தரமான பொருளாக இருந்தால் இரத்தம் தானாக ஊறும். நமது உடம்பில் உள்ள எலும்பு மஜ்ஜைகள் அதற்குத் தேவையான எல்லாப் பொருளும் கிடைத்தவுடன் 48 மணி நேரத்தில் முதல் சொட்டு இரத்தத்தை உருவாக்கும். இப்படி ஒவ்வொரு சொட்டாக உருவாக்க ஆரம்பித்து 120 நாட்களில் உடலில் உள்ள அனைத்து இரத்தத்தையும் மொத்தமாக புதிதாக மாற்றி விடும். இப்படி நமது உடலில் உள்ள இரத்தத்தை முற்றிலுமாக தூய்மையான வீரியமுள்ள நல்ல இரத்தமாக மாற்றி வைத்தால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் தன் நோயைத்தாமாகவே குணப்படுத்திக் கொள்ளும். தன் உறுப்புகளைத் தாமாகப் புதுப்பித்துக் கொள்ளும்.
              இப்படி நம் உடலில் உள்ள இரத்தத்தைச் சுத்தமாக்குவது மூலமாக அனைத்து நோய்களையும் எந்தவொரு மருந்து, மாத்திரை, மருத்துவர், இல்லாமலும் நமக்கு நாமே குணப்படுத்திக் கொள்ள முடியும். எனவே உணவு குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று உழைப்பு, தூக்கம் இந்த ஐந்தையும் சரி செய்து இரத்தத்தில் எல்லாப் பொருளும் நல்ல பொருளாக மாற வைப்பது எப்படி என்பதை நாம் கற்றுக் கொள்ள போகிறோம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here