• மேஷம்
  மேஷம்:  ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக  நெருக்கடிகள் வந்து நீங்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.
 • ரிஷபம்
  ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக்கொடுத்துப் போங்கள். போராடி வெல்லும் நாள். 
 • மிதுனம்
  மிதுனம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பணபலம் உயரும். நெடுநாட்களாக நீங்கள்பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள்.  உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.  
 • கடகம்
  கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வியாபாரத்தில் போட்டி களை  எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
 • சிம்மம்
  சிம்மம்: குழம்பிக் கொண்டிருந்த நீங்கள் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.  வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள். 
 • கன்னி
  கன்னி: சந்திராஷ்டமம் தொடர் வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களால்  டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
 • துலாம்
  துலாம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக  ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
 • விருச்சிகம்
  விருச்சிகம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடிவந்துப் பேசுவார்கள். காணாமல் போன ஆவணம் கிடைக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள்  தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.  
 • தனுசு
  தனுசு: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து  கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். கனவு நனவாகும் நாள். 
 • மகரம்
  மகரம்: எதிர்ப்புகள் அடங்கும்.பால்ய நண்பர்கள் உதவுவார் கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள்  ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ் கும் நாள். 
 • கும்பம்
  கும்பம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.  உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டு பேசுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள். 
 • மீனம்
  மீனம்: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்  வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here