விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்.2049/இ2/2019, நாள்- .02.2019.
பொருள்- புதுமைப்பள்ளி விருது – 2018-19ம் கல்வியாண்டிற்கான புதுமையான விதத்தில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருது வழங்குதல் – தகுதியான பள்ளிகள் – உரிய விவரங்களுடன் பரிந்துரை செய்யக்கோருதல் – சார்பு
பார்வை- 1.சென்னை-6, பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண்.004463/ஐ/இ1/2018, நாள்- 06.02.2019.
2.அரசாணை (நிலை) எண். 253 பள்ளிக்கல்வித் (விஇ2) துறை
நாள்.04.12.2017.
************
பார்வை (1)ல் காணும் இயக்குநரின் செயல்முறைகளுடன் அனுப்பப்ட்ட பார்வையில் காணும் அரசாணையின் நகல் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி புதுமைப்பள்ளி விருது வழங்கிட ஏதுவாக தகுதியான பள்ளிகளை இனம் கண்டு உரிய விவரங்களுடன் பரிந்துரை செய்து (இரு கருத்துருக்கள்) 16.02.2019 க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பொருள்மீது மறுநினைவூட்டகளுக்கு இடமின்றி உரிய நாளுக்குள் பள்ளிகள் விவரங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு.1. இயக்குநரின் செயல்முறைகள்
2. அரசாணை நகல்.
(ஒம்/-க.முனுசாமி)
. முதன்மைக் கல்வி அலுவலர்,
விழுப்புரம்
பெறுதல்- 1.அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், விழுப்புரம் மாவட்டம்.
2.அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், விழுப்புரம் மாவட்டம்.
நகல் சென்னை-6, பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக
பணிந்தனுப்பப்படுகிறது.