2019 -20ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்…

வரி இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

CPS ரத்து குறித்த சித்திக்  குழு அறிக்கை  அரசு பரிலித்து வருகிறது

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

* பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல்

 

2019-20 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ16,315 கோடியாக குறையும் – துணை முதலமைச்சர்

* வரி வருவாய் ரூ1,97,721 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது – துணை முதலமைச்சர்

பட்ஜெட் உரையின் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் புகழாரம்.

 பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு

அரசு ஊழியர் நலனுக்கு  ரூ.55,399 கோடி ஒதுக்கீடு

விவசயிகளுக்கு 50% மானிய விலையில் வேளான் இயந்திரங்கள் வழங்கப்படும்.

9,000+ சீருடை பணியாளர்கள் காலியிடங்கள் நிரப்பப்படும்.

* கஜா புயல் நிவாரணமாக ரூ.2,361.41 கோடி வழங்கப்பட்டு்ளது

* ஜெர்மன் வங்கி உதவியுடன் 2,000 பேட்டரி பேருந்துகள் வாங்கி இயக்கப்படும்

* சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் முதல்கட்டமாக 500 பேருந்துகள்

* சென்னை மெட்ரோ ரயில் மாதவரம் – கோயம்ேபடு – சோழிங்கநல்லூர் திட்டத்திற்கு ஜப்பான் நிதியுதவி

* மதுரை மாவட்டம் திருமங்கலத்தை தலைமையாக கொண்டு புதிய வருவாய் கோட்டம்

* கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் விரைவில் உருவக்கப்படும்

* ரூ.2,000 கோடியில் சென்னையில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ403.76 கோடி ஒதுக்கீடு

மாநில வரி வருவாய் வளர்ச்சி 16 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பு – துணை முதலமைச்சர்

* ஜிஎஸ்டி வருவாயில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – துணை முதலமைச்சர்

* ஜிஎஸ்டி இழப்பீடு தொகை மத்திய அரசிடம் இருந்து இதுவரை வரவில்லை – துணை முதலமைச்சர்

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய வெள்ள தடுப்பணை கட்டப்படும் – துணை முதலமைச்சர்

* நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ284 கோடி ஒதுக்கீடு – துணை முதலமைச்சர்..

காவல்துறைக்காக ரூ8.084 கோடி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ407.76 கோடி ஒதுக்கீடு – துணை முதலமைச்சர்

* காவல்துறையில் 9975 காலிப் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை – துணை முதலமைச்சர்..

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here