பழமையான இந்திய தியான பயிற்சியில் ஒன்றாக யோகா, மனிதர்களின் தசை மற்றும் எலும்பு வலி போக்குகிறது என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது, இதனை ஆராய்ச்சியாளர்களும் நம்பி வருகின்றனர். இந்நிலையில் முறையற்ற யோகா பயிற்சி பாதுகாப்பானது அல்ல என்று ஒரு நாளிதழில் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, பாடிஒர்க் அண்ட் மூவ்மென்ட் தெரஃபி என்று சொல்லக்கூடிய நாளிதழ் ஒன்று, யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் காயங்கள் ஏற்படும் சதவீதம் அதிகரிக்கிறது என்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.

யோகா பயிற்சி, தசைக்கூட்டு சீர்குலைவுகளுக்கான மாற்று சிகிச்சையாக கருதப்படுவதால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற உடற்பயிற்சியை தவிர, யோகா பயிற்சி தசைக்கூட்டு வலிக்கு பயனளிப்பதை போல் தெரிந்தாலும், இறுதியாக தசைக்கூட்டு வலியை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று ஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகத்தில் இருந்து எவாஞ்சலோஸ் பப்பாஸ் கூறியுள்ளார். 

எங்களுடைய ஆய்வின் படி, உடற்பயிற்சி மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்களின் காயத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது யோகா பயிற்சி செய்யும் வீரர்களின் காயத்தின் வலி, கடந்த ஒரு வருடத்தில் 1% ஆக அதிகரித்துள்ளது. எனினும் மக்கள் யோகா பயிற்சி மிகவும் பாதுகாப்பான செயல்பாடு என்று கருதுகின்றனர். ஆனால் கடந்த ஆய்வறிக்கையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது யோகா பயிற்சி மேற்கொள்பவரின் காயங்கள் 10% வரை அதிகரித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here