புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 384 வேட்பாளர்களின் பெயரை பதிவிடும் வசதியை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. கடந்த தேர்தல் வரை பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு கன்ட்ரோல் யூனிட்டில், 4 பேலட் யூனிட்களை  பொருத்தி இயக்கும் வசதி இருந்தது. இதன் மூலம் ஒரு பேலட்டில் நோட்டா உள்பட 64 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட முடியும். கூடுதலாக போட்டியிட்டால் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்பட்டது. தற்போது தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பல்வேறு தொழில்நுட்பத்தை புகுத்தி உள்ளது. இந்த இயந்திரத்தை பெல் நிறுவனம் தயாரித்துள்ளது. யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை வாக்காளர் தெரிந்து கொள்ளும் விவிபெட் இயந்திரம், அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

 மேலும், ஒரு கன்ட்ரோல் யூனிட்டில் 24 பேலட் யூனிட்களை பொருத்தலாம். இதன்மூலம் ஒரு தொகுதியில் நோட்டா உள்பட 384 பேர் வேட்பாளர்களாக போட்டியிட முடியும். ஒரு தொகுதியில் 385 பேர் போட்டியிட்டால் மட்டுமே வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த முடியும். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் இந்த வகை புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here