கலசபாக்கம் தாலுகாவில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்த்தி கலெக்டர் நடவடிக்கை எடுத்ததால் அரசு, ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசபாக்கம், அனக்காவூர், தெள்ளார் ஒன்றியங்களில் கல்வி, சுகாதாரம், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சிதுறை, வருவாய்த்துறை, சமூக நலம், நெடுஞ்சாலைதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏராளமான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், ஒன்றியங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் நகர எல்லைக்குள் இல்லாததால் மற்ற ஒன்றியங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களை விட இவர்களுக்கு மாத சம்பளத்தில் குறைந்தது 1500 முதல் 3000 வரை அளவுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு சாலை போக்குவரத்து வசதி, அடிப்படை வசதிகள் இருந்தும் கூட கலசபாக்கம் தாலுகாவில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஒரு சில மாதங்களிலேயே இட மாறுதல் கேட்டு வேறு இடத்திற்கு சென்று விடுகின்றனர். வீட்டு வாடகை படி உயர்த்தி தரவேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலசபாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து,  அவர் தமிழக அரசிடம் வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி எடுத்த துரித நடவடிக்கையின் பேரில் கலசபாக்கம் தாலுகாவில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்த்தி வழங்க கடந்த 1ம் தேதி கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து, மாவட்ட அரசிதழில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. நீண்டநாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதால் கலசபாக்கம் தாலுகாவில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
கலசபாக்கம் தாலுகாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி குறைவாக வழங்கி வந்ததால் இங்கு பணிக்கு வந்த சில மாதங்களிலே வேறு இடங்களுக்கு மாறுதலாகி சென்று விடுகின்றனர். இதனால் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டது. தற்போது வீட்டு வாடகை படி உயர்ந்துள்ளதால் இடமாறுதலுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விழாக்களில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் பங்கேற்கும் போது, அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பல முறை வாக்குறுதி அளித்தார். மேலும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது, கலசபாக்கம் தாலுகாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்த்தி தருவதாக கூறினார். தற்போது வீட்டு வாடகை படி உயர்த்தி உத்தரவிட்டுள்ளதால் சொன்ன வாக்கை நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here