பிப்ரவரி 5ந் தேதி இணைய பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவதனை முன்னிட்டு, கூகுள் இந்தியா நிறுவனம் 2 நிமிடத்தில் தரவுகளை பாதுகாக்கும் வழிமுறையை வழங்கியுள்ளது. இதற்காக தனது முகப்பில் பாதுகாப்பு சோதனை குறித்தான விளக்குமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ் உட்பட மொத்தம் 7 மொழிகளில் கூகுள் இந்தியா நிறுவனம் #SecurityCheckKiya என்ற புதிய பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலமாக இணையத்தில் உங்கள் தரவுகளை பாதுகாக்க கூகுள் நிறுவனம் வழி வகுக்கின்றது.

கூகுள் நிறுவனத்தின் பெரும்பாலான சேவைகள் தானியங்கி முறையில் ஸ்பேம் பாட்கள், போலியான தகவல்களை கண்டறிந்து பயனாளர்களை எச்சிரிக்கையாக இருக்க உதவுதாக கூகுள் இந்தியா நிறுவனத்தின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பிரிவு தலைவர் சுனிதா மோகந்தி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here