சென்னை: தமிழகத்தில், ஏழு பல்கலை கழகங்களுக்கான, மத்திய அரசின், ரூசா திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

உயர்கல்வி மேம்பாட்டிற்காக, மத்திய அரசு, &’ரூசா&’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்திற்கான செலவில், 40 சதவீதத்தை மாநில அரசும், 60 சதவீதத்தை மத்திய அரசும் ஏற்கின்றன. நடப்பு கல்வி ஆண்டுக்கு, சென்னை பல்கலைக்கு, 50 கோடி ரூபாய் உட்பட, பல்வேறு பல்கலை களுக்கும், மத்திய அரசு நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான துவக்க விழா, &’வீடியோ கான்பரன்ஸ்&’ வாயிலாக நேற்று நடந்தது. 
நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைகளுக்கும், பிரதமர் மோடி, இந்த திட்டத்தை, வீடியோ கான்பரன்சில் பேசி, துவக்கி வைத்தார். தமிழகத்தில், சென்னை பல்கலை, அண்ணா, பாரதி யார், பாரதிதாசன், அழகப்பா, மனோன்மணியம் மற்றும் அண்ணாமலை பல்கலைகளின் உள் அரங்குகளில், குறிப்பிட்ட பாடப் பிரிவு மாணவர்கள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நிகழ்ச்சியை பார்த்தனர். பல்கலைகளின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here