*அறிக்கை*
*05.02.2019*

*தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு*
————————————-
*மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 2019-2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை இடம்பெற செய்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் மற்றும் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றி வைக்க வேண்டுகோள்*
===================
வருகின்ற 8-2-2019 அன்று தமிழக நிதிநிலை அறிக்கையை, துணை முதல்வரும் நிதியமைச்சருமான *மாண்புமிகு ஓ. பன்னீர் செல்வம்* அவர்கள் தாக்கல் செய்ய உள்ளார்கள். அந்த நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள், எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பினை தமிழக அரசின் 2019-2020 ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற செய்து ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனதில் நீங்கா இடம் பெற செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி 22.1.2019 தேதி முதல் ஜாக்டோ- ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டது.

அதன்பிறகு 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின் பொது தேர்வை மனதில் கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று *மாண்புமிகு தமிழக முதல்வர்* அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். அதனையேற்று 30.01.2019 அன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அனைவரும் பணிக்கு திரும்பினர்கள்.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது . அதன் பிறகு அனைவரும் பிணையில் விடுதலையானார்கள் . அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள். அதேபோன்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்துள்ளனர். பிணையில் விடுதலையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவும், துறை ரீதியான நடவடிக்கைகளை எடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்து அதே பணியிடத்தில் பணியில் தொடரவும் ஆவண செய்திட வேண்டுகிறேன்.

அதேபோன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்து உள்ளார்கள். அதனை ஈடு செய்யும் விதமாக விடுப்பு நாட்களில் பணி செய்ய ஆணை பிறப்பித்து, அந்த ஊதியத்தை பிடித்தம் செய்யாமல், முழு ஊதியத்தையும் வழங்கிட வேண்டி கேட்டுக்கொள்கிறேன் .

அதுமட்டுமல்லாமல் எங்கள் எதிர்கால வாழ்வாதார நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதற்கான அறிவிப்பினை 2019-2020 ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற செய்து கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றார்கள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்

*சா. அருணன்*
*நிறுவனத் தலைவர்*
*தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here