தமிழகம் முழுவதும் அங்கிகாரம் பெறாமல் செயல்பட்டு வந்த 366 தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

தனியார் பள்ளிகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் அங்கீகாரத்தை புதுப்பித்து வருகின்றன. அங்கீகார புதுப்பித்தலின் போது சுகாதாரம், குடிநீர், கழிவறை, தீத்தடுப்பு, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பான சான்றுகளை தனியார் பள்ளிகள் சமர்பிக்க பேண்டும், இந்நிலையில், தமிழகம் முழுவதும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வந்த 366 தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மாணவர்களின் நலன் கருதி வரும் மே மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் தங்கள் அங்கீராத்தை பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அவ்வாறு தவறும் பட்சத்தில் பள்ளியை அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது. 
மாவட்ட வாரியாக உரிய அங்கிகாரம் பெறாத பள்ளிகளின் பட்டியலை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் திருவள்ளூர், சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா 33 பள்ளிகளும், திருச்சி, கோவை மாவட்டங்களில் தலா 30 பள்ளிகளும் உரிய அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here