குளிர்காலத்தில்மிகப்பெரியபிரச்சனையாகஇருப்பதுஜலதோஷம். சளி, காய்ச்சல், இருமல் என மருத்துவரிடம்சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி வந்துசாப்பிடுவதற்கு பதிலாக நீங்களே உங்களது வீட்டில் உள்ளசமையலறை பொருட்கள் மற்றும் இயற்கை மருந்துகளைபயன்படுத்தி நிவாரணம் பெறலாமே.. பணமும் மிச்சம்,நோயும் குணமாகிவிடும். சளி பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் நீங்களே மருந்து தயாரித்து சாப்பிடலாம்.வீட்டிலே என்னனென மருந்துகள் தயாரிக்கலாம் எனபார்க்கலாமா.     

 

இஞ்சி வேர் 

         இயற்கை மருத்துவத்தில் சிறந்தது இஞ்சி. இதன் சாறுதொண்டை வலிக்கு சிறந்தது. இஞ்சியை இரண்டு அங்குலம்நன்கு சுத்தம் செய்து இஞ்சிக்கு தகுந்தாற் போலதண்ணீர்விட்டு கொதிக்க வைத்து இஞ்சித் துண்டுகளைஅம்மியில் வைத்து விழுதாக அரைத்து கொதிக்கும்சுடுதண்ணீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்கவைத்து பானம் தயாரித்து வடிகட்டி பருகலாம் சுவை சேர்க்கவிரும்பினால் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொள்ளலாம்.நோய்தொற்று இருப்பின் ஜலதோஷம் நீங்கும் வரை ஒருநாட்களுக்கு மூன்று வேளை இந்த தேநீரை பருகினால்தொண்டை வலி எளிதில் குணமாகும். 

யூக்கலிப்டஸ் எசென்ஷல் ஆயில்

         ஜலதோஷம் ஏற்பட்டால் மூக்கில் சளி வடிதல் பெரியபிரச்சனையாக இருக்கும் இந்த பிரச்சனையை போக்கயூக்கலிப்டஸ் எசென்ஷல் ஆயில் பயன்படுத்தலாம்.. எப்படிபயன்படுத்தலாம் யூக்கலிப்டஸ் எசென்ஷல் ஆயிலை நன்குகொதிக்கும் சூடான நீரில் ஐந்து முதல் ஆறு சொட்டுகள்சேர்த்து போர்வையால் ஆவி வெளியே போகாதவாறுமூடிக்கொண்டுஆவி பிடிக்க வேண்டும். இதை மூன்று வேளைசெய்தால் தலையில் தேங்கி இருக்கும் தண்ணீர் ஆவிவழியாக வெளியாகிவிடும் சளி பிரச்சனை நீங்கிவிடும்…

எல்டர் ஃப்ளவர் தேநீர்

       தேநீர் பருகியும் ஜலதோஷத்தை குணப்படுத்திவிடலாம். அதாவது எல்டர்ஃப்ளவரில் தயாரிக்கப்படும் தேநீர்ஜலதோஷத்தை குணப்படுத்தும் பண்புகளைகொண்டுள்ளது. எல்டர்ஃப்ளவரை மருத்துவ ஆய்வுக்குஉட்படுத்திய போது நேர்மறையான பண்புகளைகொண்டுள்ளது என தெரிவித்துள்ளனர். 

        இதை சிறு குழந்தைகளுக்கு ஏற்படும்பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுத்தலாம். எல்டர்ஃப்ளவர் பூக்களை காய வைத்து சூடு நீரில் கொதிக்கவைத்து ஒரு கப் பூக்களை போட்டு தேயிலை சேர்த்து கொதிவந்ததும் இறக்கி பருகலாம் விருமம்பினால் சர்க்கரைசேர்த்துக்கொள்ளலாம்..

உடல் நலத்தை பாதுகாக்க வீட்டிலே இருக்குது பல மருந்துகள்அதனை தகுந்தவாறு பயன்படுத்தி நோய்களை போக்கலாம். பணத்தையும் சேகரிக்கலாம். இயற்கை மருத்துவத்தை விடசிறந்தது வேறெதுவும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here