தமிழக அருங்காட்சியகத் துறையில் காலியாக உள்ள காப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டு உள்ளது. 

இதற்கு தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காப்பாளர் பணிக்கான 4 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.மாதம் ரூ.36700 -116200 சம்பளம் கிடைக்கும்.

1.7.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது. 

விலங்கியல், தாவரவியல், புவியியல், மானுடவியல் அல்லது இந்திய தொல்லியல், சமஸ்கிருதம், வரலாறு போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழ்மொழி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பதிவுக் கட்டணம்: ரூ.150 மட்டுமே.

எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, மதுரை மற்றும் கோவை. எழுத்துத் தேர்வு தாள்- 1, தாள் -II என 500 மதிப்பெண்கள் கொண்டது. நேர்முகத் தேர்வு 70 மதிப்பெண்கள் என 570 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். 

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_06_Notifyn_Curator.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.  ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.02.2019

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here