இன்றைய உலகில் வாட்ஸ் அப் பயன்படுத்தாத பொதுமக்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. பொது இடத்திலும் சரி, வீட்டிலும் சரி கையில் செல்போனை வைத்துக் கொண்டு அலைவோர் தான் அதிகம். வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க ஒரு பக்கம் வாட்ஸ் அப் ஏகப்பட்ட அப்பேட்டுக்கள்ளை அள்ளிக் குவித்துக் கொண்டே இருக்கிறது.

இவற்றை தினமும் தினமும் அப்டேட் செய்து வாடிக்கையாளர்கள் ஒருபக்கம் தனி உலகில் வாழ்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது சரி தினமும் வாட்ஸ் அப் யூஸ் பண்றீங்களே எப்பயாவது இப்படி ஒரு சீக்ரெட் வாய்ஸ் அப்பிலே இருக்குனு உங்களுக்கு தெரியுமா?

இப்போது பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களில் இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள் ஒன்று தான். உதாரணமாக பேஸ்புக், வாட்ஸ்அப், யூடுப் போன்றவை.

அதிகாரப்பூர்வமாக ஒரு ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்த அனுமதி இல்லை. இருந்த போதும் சியோமி, சாம்சங், விவோ, ஒபோ, ஹவாய் மற்றும் ஹானர் போன்ற ஸ்மார்ட் போன்கள், டூயல் ஆப்ஸ் அல்லது டூயல் மோட் ஆப்சன்கள் உள்ளது. இந்த ஆப்சன்கள் இரண்டு வெவ்வேறு வாட்ஸ்அப் பயன்படுத்த அனுமதி அளிக்கிறது.

இந்த ஆப்சன்களை எப்படி பயன்படுத்தி, ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் அக்வுண்ட்களை பயன்படுத்தலாம் என்ற சீக்ரெட்டை உங்களுக்கு நாங்கள் சொல்லி தரோம்.

சாம்சாங் ஸ்மார்ட் போனில் டூயல் மேஜென்சர் ஆப்சனில் இதை எளிதாக செய்து கொள்ள முடியும். இதற்கு Settings > Advance features > Dual Messenger ஆப்சனுக்கு செல்ல வேண்டும்.

சியோமி (MIUI) ஸ்மார்ட் போன்’களில் இந்த வசதிக்காக டூயல் ஆப்ஸ் ஆப்சன் உள்ளது. இந்த ஆப்சனை Settings > Dual Apps என்ற டேப்பில் சென்று செய்து கொல்லாம்.

ஒபோ ஸ்மார்ட் போன்களை இந்த வசதியை பெற க்ளோன் ஆப்ஸ் என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும். இதற்கு Settings > Clone Apps என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும்.

விவோ ஸ்மார்ட் போன்களில் இந்த வசதியை பெற க்ளோன் ஆப்ஸ் என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும். இதற்கு Settings > Clone Apps என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும்.

அசுஸ் ஸ்மார்ட் போன்களில் இந்த வசதியை பெற டூவின் ஆப்ஸ் என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும். இதற்கு Settings > Twin apps
என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும்.

ஹவாய் ஸ்மார்ட் போன்களில் இந்த வசதியை பெற ஆப் டூவின் என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும். இதற்கு Settings> App Twin என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும்.

இந்த ஆப்சன்கள் சில போன்களில் மட்டுமே கிடைக்கிறது என்பது தெரிந்து கொள்வது அவசியமாகும். இதுமட்டுமின்றி சில அப்ளிகேஷன்கள் பேர்லல், டூயல் அப் விசார்ட், டபுள்அப் போன்ற அப்ளிகேஷன்கள் கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது அவற்றை பயன்படுத்தியும் ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப்களை பயன்படுத்தலாம்.

 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here