நடிகை கஸ்தூரி அரசியல், சமூக வி‌ஷயங்கள் குறித்த கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தைரியமாக பதிவிடுகிறார். அவருக்கு எதிர்ப்புகளும் வருகின்றன. சமீபத்தில் நடிகர் அஜித்குமார் ரசிகர்களுடன் மோதினார். அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் தொடங்கியபோதும் சர்ச்சை கருத்தை வெளியிட்டார். 
‘‘ஒன்னாம் கிளாஸ் வாத்தியாருக்கு டைடல் பார்க்கில் வேலை செய்யும் என்ஜினீயரை விட சம்பளம் அதிகம். சத்துணவுக்கும் சம்பளத்துக்கும் மிக அதிகம் செலவு செய்வது தமிழகம்தான் என்று அவர் கூறியதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. ஆசிரியர்கள் கோரிக்கை நியாயமானது என்று பலரும் கஸ்தூரியை கண்டித்தனர். 
தற்போது ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று பணிக்கு திரும்பிய நிலையில் கஸ்தூரி மீண்டும் ஆசிரியர்களை வம்புக்கு இழுத்துள்ளார். ‘‘ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் ஆகி உள்ளது. மிரட்டலுக்கு பணியாத இ.பி.எஸ் அரசு என்று பெயர் கிடைத்துள்ளது. போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை. மாணவர்களுக்கு ஆறுதல். பாடமெடுப்பவர்களுக்கு பாடம் என்று பதிவிட்டார். 
‘‘அது என்ன தற்காலிக வாபஸ்.? சம்பளம் கட் ஆவுது. வேலையும் போயிடும்போல இருக்கு. இப்போது வேண்டாம் விடுமுறை நாட்களில் தேர்தல் வரும் தேர்தல் பணிக்கு கூப்பிடும்போது, நாம் யார் என்று காட்டுவோம் பாரு’’ என்று கறுவினார் நண்பர் என்று இன்னொரு கருத்தையும் பதிவிட்டுள்ளார். இதற்கும் கஸ்தூரிக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here