அறிக்கை
01.02.2019

2019 – 2020 இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய நிதித்துறை அமைச்சர் புயூஸ் கோயல் தாக்கல் சய்தார்
பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பது அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
—————————–


மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் புயூஸ் கோயல் இன்று தாக்கல் செய்தார்

தனிபர் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லடசத்திற்கு மேல் இருந்தால் வரிசெலுத்த வேண்டும் என்று இருந்ததை மாற்றி அடுத்த ஆண்டு முதல் தனிநபர் ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மேல் இருந்தால் தான் வரி என்பதை வரவேற்கிறேன்

அதே போன்று பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் பணிக்கொடையை ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சமாக உயர்த்தியதையும் வரவேற்கிறேன்

அதே நேரத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 19 வயது ஊழியர் மாதம் ஊதியத்தில் ரூ. 55ம் 29 வயது ஊழியர் ரூ.100 செலுத்தினால் அதே தொகையை அரசு செலுத்தி ஓய்வுபெறும் வயதான 60 வயதிற்கு பிறகு ஓய்வூதியமாக மாதம் ரூ. 3000 வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறித்துள்ளார் நிதியமைச்சர்

புதிய பங்களிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பது வேடிக்கை ,

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தான் பெறும் மாத ஊதியத்தில் இருந்து 10% விழுக்காடு ஊதியத்தை பிடித்தம் செய்கின்றார்கள் பிடித்தம் செய்த அதே தொகையை அரசு செலுத்தி பங்கு சந்தையில் விட்டு அதில் வரும் தொகையை தான் ஓய்வு பெறும் நேரத்தில் ரூ. 5 லட்சமோ ரூ.10 லட்சமோ கடைசியாக வழ்ங்கப்படுகிறது ஓய்வூதியம் வழங்கப்படவில்லை , பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வுபெறும் நேரத்தில் வழங்கப்படும் பணிக்கொடை புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இல்லை. நிதிநிலை அறிக்கையில் பணிக்கொடையாவது வழங்குவார்கள் என்று எதிர்பார்தோம்

ஆனால் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர் ரூ.55 மற்றும் ரூ்100 செலுத்துபவர்களுக்கே ஓய்வூதியம் என்று அறிவித்திருப்பது தேர்தலுக்கான நிதிநிலை அறிக்கையோ என்று எண்ண தோன்றுகிறது காரணம் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களிடம் மாத வருமானத்தில் ரூ.55 மற்றும் ரூ.100 பிடித்தம் செய்பவர்களுக்கே ஓய்வூதியம் என்றால் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களிடம் மாதம் ஊதிந்த்தில் 10% விழுக்காடு பிடித்தம் செய்து அதே தொகையை அரசு செலுத்துகிறது. அப்படி இருந்தும் அவர்களுக்கே ஓய்வூதியம் இல்லை எனும்போது இவர்களுக்கு எப்படி சாத்தியமாகும்

இது முழுக்க முழுக்க தேர்தல் நேரத்து நிதிநிலை அறிக்கையாக இருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here