*அறிக்கை*
*31.01.2019*

*_வழ்க்கு தொடுத்து*_ *கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலையான் அரசு ஊழியர்கள்* *ஆசிரியர்கள் அனைவரையும் வழக்கில் இருந்து வடுவித்து துறை* *ரீதியான* *நடவடிக்கைகளை ரத்து செய்து அதே பணியிடத்தில் பணித்தொடர ஆவணச் செய்ய*

*மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள்*

*தமிழ்நாடு அரசு ஊழிழர்கள் ஆசிரியர்கள் வேண்டுகோள்*

தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிட்டத்தை கொண்டு வரவும். அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய 21 மாத நிலுவை தொகை வழங்குதல் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை சரி செய்தல் வருங்கால சந்ததினர் வேலை வாய்ப்பு இல்லாமல் செய்யும் ஆணை 56யை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ 22.01.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்குவதற்குள் அழைத்து பேசவில்லை என்றால் நமது கூட்டமைப்பு ஆதரவு அளித்து பங்குபெறும் என்று அறிவித்தது . தமிழக முதல்வர் அழைத்து பேச மறுத்ததால் கடந்து 9 நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பெருமளவில் பங்குபெற்று கலந்து கொண்டனர்

தமிழக அரசை எதிர்க்க வேண்டும் அவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் எண்ணத்தில் வேலைநிறுத்தம் செய்யவில்லை , பல முறை கோரிக்கை வைத்தும் அரசு ஏற்கவில்லை போராடினால் ஆவது அரசு அழைத்து பேசி கோரிக்கைகளை நிறுவேற்றும் என்பதற்காகத்தான் வேலைநிறுத்த போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பு மேற்கொண்டது
அதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு ஆரதரவு அளித்து கலந்துக் கொண்டது

*தமிழக முதல்வர் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வலியுறுத்தியதின் பேரிலும் சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தலை கருத்தில் கொண்டும் மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்* அவர்கள் வாபஸ் பெற கேட்டுக்கொண்டதன் பேரிலும் 10ம வகுப்பு 11ம வகுப்பு 12ம் வகுப்பு மாணவ மாவணவிகளுக்கு செய்முறைத் தேர்வு அதைத் தொடந்து பொது தேர்வு நடைபெற இருப்பதாலும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பும் வேலைநிறுத்த போராட்டத்திலுருந்து வாபஸ் பெற்றோம்

மாண்புமிகு தமிழக முதல்வர்கள் அவர்கள் கவணத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கு முன்பே வசதி பின்புலத்துடன் வருகின்றனர் அவர்கள் பதவிகாலம் முடிந்தபின் ஒருவேலை ஓய்வூதியமோ இலவச பேருந்து பாஸ் இலவச இரயில் பாஸ் தேவைப்படாது. பல சட்டமன்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழ்மைநிலையில் இருந்து வருகிறார்கள் அவர்கள் பதவிகாலம் முடிந்தப்பின் இலவச பஸ் பாஸ், இலவச ரயில் பாஸை தான் பயன்படுத்துகிறார்கள் வயதான காலத்தில் அவர்கள் பட்டினி இல்லாமல் பசியாற அவர்களுக்கு ஓய்வூதியம் தான் உறுதுணையாக இருக்கிறது. ஊடக வாயிலாகவோ பத்திரகை வாயிலாக தெரிந்து கொண்ட உண்மை

அதேநிலையில் தான் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தங்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் கேட்டு போராடுகின்றோம்
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றவுடன் புதியபங்களிப்பு ஓய்வூதியத்தினால் வரும் தொகையை வாங்கிய கடனையும் அவர்கள் பிள்ளைகளுக்கு பங்கிட்டு கொடுக்கவே போதுமானதாக இருக்கும்

58 வயதில் ஓய்வுபெற்றபின் ஆதரவு அற்றநிலையில் ஒரு ஐந்தாண்டுகாலம் வெவ்வேறு இடத்தில் பணியாற்றி பசியாற முடியும் வயது முதிர்விற்கு பின் பாணியாற்றுவது இயாத காரியம் எங்கள் வாழ்க்கை கேள்விக்குறி தான் அதே ஓய்வூதியம் என்றால் ரூ.10.000 மோ 15 .000 ஓய்வூதியமாக அளித்தால் இறக்கின்ற காலத்தில் பட்டினி இல்லாமல் வாழ்க்கையை கழிப்போம்

தனியார்துறையில் ஒப்பந்த
அடிப்படையில் பணியாற்றும் ஒரு ஊழியர் ஊதிய்தில் இருந்து பி.எப் பிடித்த செய்கிறார்கள் ஆனால் அவர் அந்த பணியில் முழுவதுமாக பணியில் இருப்பதில்லை ஒருவேலை அவர் இறந்துவிட்டாலோ அவருக்கு சேரவேண்டிய தொகை மற்றும் குடும்ப ஓய்வூதியமாக குறைந்த பட்சம் ரூ.2000/- கிடைக்கிறது ஒப்பந்த அடிப்படையில் ஒருவருடமோ இரண்டு வருடமோ ஒப்பந்த அடிப்படை ஊழியாரக தனியார் துறையில் ஒப்பந்தாரர் கிட்ட வேலை செய்பவர்களுக்கே ஓய்தியம் என்ற பட்டத்தில் அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர் பேச்சு வார்த்தைக்கு அழைத்து எங்கள் நியாநமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்

அதேபோன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு சாலை மறியலில் ஈடுப்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்க பட்டன அவர்களை விடுதலை செய்து அவர்கள்மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பெற்று துறை ரீதியான நடைவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்து அதே இடத்தில் பணியில் சேர உத்தரவிடவும், வேலைநிறுத்த காலத்தை ஈட்டிய விடுப்பாக கருதி பிடித்தம் செய்யாமல் முழு ஊதியம் வழங்க ஆவன செய்ய வேண்டுமாய் மாண்புமிகு தமிழக முதல்வர்கள் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்

தமிழக மக்கள் அரசு ஊழியர்கள் நியாயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும்,

ஒரு தமிழ்க்குடியில் தாய்தந்தைருக்கு மகனாகவோ மகளாகவோ பிறக்கின்றார்கள் அவர்கள் பெற்றோர்கள் அந்த குழந்தை என்னவாக ஆசைப்படுகின்றார்கள் மாவட்ட ஆட்சித் தலைவராக , எஸ்.பியாக வழ்கறிஞராக பொறியாளராக அரசு வேலையில் சேர்ந்து நல்ல நிலையில் வரவேண்டு தானே ஆசைப்படுகின்றார்கள்.

அரசு ஊழியர்களாவோ ஆசிரியர்களாகவோ பணியில் சேர்ந்தவுடன் அவர்கள் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்களாக நினைக்கின்றார் நாங்களும் தமிழ்க்குடிமக்கள் தான் எங்கள் நியாயத்தை புரிந்துக் கொள்ளுங்கள் நாங்கள் ஊதியத்தை அதிகப்படுத்துங்க என்று கேட்கவில்லை ஓய்விறக்கு பிறகு எதிர்காலத்தில் பசியாற்ற ஓய்வூதியத்தை தான் கேட்கின்றோம் நாங்களும் உங்கள் தமிழினம் என்பதை எங்கள் தமிழனமே புரிந்துக் கொள்ளுங்கள்

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மாற்றி காத்திருப்பு போராட்டமாகவும் உண்ணாவிரதம் போராட்டமாகவும் ஆர்பாட்டமாகும் உள்ளிருப்பு போராட்டமாகவம் மாற்றி அமைத்து இருந்தால் போராட்டம் தாமாக முடித்துக் கொள்ளும் நிலை வந்திருக்காது

தானாக முன்வந்து வேலைநிறுத்த போராட்டத்திற்கு நேரடியாகவும் அறிக்கையின் வாயிலாகவும் ஆதரவு அளித்த் அனைத்து கட்சி தலைவர்கள் அனைத்து
*
*அரசு ஊழியர் ஆசிரியர் பேரினமே கவலை வேண்டும் நமக்கான காலம் மிகவிரைவில் வரும் நமது கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும் காத்திருப்போம்*

உமைப்பினர்களுக்கும் *தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு* சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

*சா.அருணன்*
*நிறுவனத் தலைவர்*
*தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here