*💥நடந்ததை மறப்போம், நடக்கவேண்டியதை யோசிப்போம்*💥

💥 🙋🏻‍♂ *அந்த காலத்தில நாங்களெல்லாம் ஒரு மாசம் ஆனாலும் களத்தில நிற்போம்*💥

💥😢 *அந்த காலத்தில ஆண், பெண் ஆசிரியர்களின் சதவீதம் 70%, 30% என்ற சதவீதத்தில் இருந்தது.இந்த காலத்தில 30%, 70% என்ற சதவிகிதத்தில் உள்ளது.*💥

💥 😢 *களத்தில் கண்ட உண்மை நிலவரம் ஆசிரியைகள் 5 மணிக்கு இல்லம் திரும்பும் Mind Set. உள்ளவர்கள். அதற்கு பல்வேறு காரணங்களும் உண்டு உடல் ரீதியான தொந்தரவுகள், இல்ல கடமைகள், பள்ளி விட்டு வரும் குழந்தைகள் பராமரிப்பு*💥

💥 😢 *இவர்களை 9 மற்றும் 10 மணிக்கு மண்டபத்தை விட்டு விடுவிக்கும்போது, மனதளர்ச்சி, உடல் தளர்ச்சியடைதல் ஏற்படுகிறது,*

*மண்டபத்திற்கு வெளியே காத்திருக்கும் கணவர், குழந்தைகள் மண்டபத்தை விட்டு வெளியே வந்தவுடனே ஆசிரியைகளிடம் அதிருப்தியை மண்டப வாசலிலேயே தெரிவிப்பது*💥

💥😢 *பக்கத்து மண்டபத்தில் உள்ளவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டாலும், ஆசிரியர்கள் இல்லத்தில் உள்ள மனைவிகளின் வசவு பேச்சுக்கு பயந்து இல்லத்தை நோக்கி ஒடிவிடுதல்*💥

💥🙋🏻‍♂ *கைது ஆகும் ஆசிரியர்கள் நிலை*💥

💥 *32 மாவட்டத்திற்கும் தனிதனியாக ஜாக்டோ ஜியோ வக்கீல்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்*💥

💥 *இன்று களத்தில் கண்ட காட்சி அவரவர் பள்ளி ஆசிரியர்களை விடுவிக்க சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களே அலைந்துக் கொண்டிருந்தனர்,ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இருப்பினும், சட்ட விதிமுறைகளில் தெளிவு இல்லாததினால், ஒவ்வொன்றையும் யாரிடமாவது கேட்டு கேட்டு செயல்பட்டு கொண்டிருந்தனர்*💥

💥 *நம் மாவட்டத்திற்கென்று தனி வக்கீல் நியமிக்கப்பட்டிருந்தால், அனைத்து நடைமுறைகளை, ஜாமீன் வழங்கும் ஆட்கள் வரை அவர்களே தயார் செய்து விடுவர்*💥

💥 *1000 போராட்ட வடிவங்கள் இருப்பினும், வட்ட மறியல், மாவட்ட மறியல் என்ற ஹைதர் அலி காலத்து ஐடியாகளையே செயல்படுத்தி ஆசிரியர்களை சிறைக்குள் தள்ளுவதை தவிர்க்கப்படவேண்டும்*💥

💥 *இந்த காட்சிகள் ஆசிரியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்திவுள்ளது,*💥

💥 *யார் கைதானாலும் வெளியே கொண்டு வருதல் எளிமையாக்கப்பட்டிருந்தால், கைது நடவடிக்கைக்கு ஆசிரியர்களிடம் உள்ள அச்சம் தவிர்க்கப்பட்டிருக்கும்,*💥

💥 *அனைத்து கேஸ்களும் சாட்சிகள் இல்லாத, புனையப்படும் பொய் கேஸ்களே*💥

💥 🙋🏻‍♂ *போராட்ட மேலாண்மை கையாளப்பட்டதா?*💥

💥 😢 *ஜாக்டோ ஜியோவாகிய நாம் நேரடியாக இதுவரை வழக்கு தொடுக்கவில்லைஇது தற்போது பெரிய குறையாக நீதிமன்றத்தால் சொல்லப்படுகிறது*💥

💥 😢 *தற்போது நமக்கு தலைவலியாக உள்ளவர்கள் பொது மக்கள், மீடியாக்கள், இணையதள ஆளும் கட்சி அடிவருடிகள், பிரசார பீரங்கிகள்*💥

💥 *நமது போராட்டத்தின் தன்மை, ஒவ்வொரு Gador ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள், அவர்களின் கல்விதகுதி, மத்திய அரசு ஊதியம், மாநில அரசு ஊதியம் இவற்றிற்கு இடையேயுள்ள வித்தியாசங்களையும்,*💥

💥 😢 *மாதாமாதம் நம் ஊதியத்தில் பிடிக்கப்படும் CPS பணத்தின் நிலையும், இதுவரை CPS ல் ஒய்வுபெற்றவர்களின் இன்றையநிலையும், அவர்களுக்கு பணம் திரும்ப கிடைத்ததா? ஏமாற்றப்பட்டார்களா? அவர்களின் இன்றைய நிலை? அவர்களின் இல்ல முகவரி, புகைப்படம், இவை அனைத்தும் துண்டு பிரச்சாரம் மூலமோ, வீடியோ காட்சிகளின் மூலமாகவோ ஆறு மாதத்திற்கு முன்பே தமிழகத்திலுள்ள அனைத்து மக்களும் பார்க்கும் வண்ணம் பிரசாரம் செய்திருக்கவேண்டும்.ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் ஊர் முக்கியஸ்தர்களையும் கூட்டி,*

*மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஒவ்வொரு நிமிடமும் உழைக்க தயாராக இருக்கிறோம் என்பதை தெளிவாக விளக்கிவிட்டு, ஆசிரியர்களுக்கு அரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, மாணவர்களை வைத்துக் கொண்டே தெளிவாக விளக்கவேண்டும்*💥

💥 *இதுபோன்ற பணிகளை செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும், பிரச்சார குழு, செய்திகள் பிரிவு குழு, நிதிதிரட்டல்குழு, கோர்ட் நடவடிக்கைகள் குழு, போன்ற பல்வேறு குழுக்கள் அமைத்து செயல்பட வேண்டும்*💥

💥 *அரசாணை 56, 100, 101, மூலம் வருங்கால இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து வீடியோ காட்சிகள், துண்டு பிரசுரங்கள் வேலைவாய்ப்பின்றி நக்ஸலைட்களாகவோ, கொள்ளைக்காரர்களாகவோ மாற ஏற்படவுள்ள வாய்ப்புகள் குறித்து இளைஞர்களுக்கு தெளிவாக விளக்கவேண்டும்*💥

💥 *சட்டசிக்கல் இல்லாமல் அரசை முடக்கவேண்டும் என்ற நோக்கத்திலே செயல்படவேண்டும்*💥

💥 *மூணாங்கிளாஸ் படித்த அரசியல்வாதிகளின் மூளையையும் , IAS அதிகாரிகளின் எதிர்மறை சிந்தனை மூளையையும் சிதைக்கும் வண்ணம் நம் செயல்பாடு இருக்கவேண்டும்*💥

💥 *😢அனைத்திற்கும் முதன்மையாக*
*30 ஆண்டுக்கு முற்பட்ட பிற்போக்கு சிந்தனைக் கொண்ட , ஈகோ தன்மையுள்ள, தலைமைகளை சற்று சாந்தப்படுத்திவிட்டு*

*புதிய சிந்தனையுள்ள, ஈகோ இல்லாத, மேலாண்மை திறன் கொண்ட, நவீன காலத்திற்கு ஏற்ற துடிப்புள்ள செயல்பாடு கொண்ட, கட்சி சாயம் பூசப்படாத தலைமை நம்மை இயக்கவேண்டும்,*💥

💥😢 *பல சங்கங்கள் போராட்டத்தில் இல்லாததற்கு காரணம், மற்ற சங்க தலைமைகள், இந்த பழமைகளின் முன் கைகட்டி நின்று எங்களையும் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று வேண்டவேண்டும் என்று எதிர்பார்ப்பதே ஆகும்*💥

💥 *இளைஞர்களிடம் ஈகோ இருக்காது, அண்ணா வாருங்கள், அண்ணா வாருங்கள் என்று அனைத்து சங்கத்தையும் ஒருங்கிணைத்துவிடுவர்.*💥

💥 *திட்டமிட்டு செயல்படுதலை விடுத்து,*

*அன்பார்ந்த தோழர்களே!*

*இந்த அரசு நமக்கு 21 மாத அரியர்தொகை வழங்கவில்லை, மாதாமாதம் நம் CPS பணத்தை திருடிவிட்டது……. என்பதை நீங்கள் ஒரு நிமிடம் சிந்தித்து பார்க்கவேண்டும்!*

*என்று நரம்பு புடைக்க கத்தி, காது சிவக்க ஆவேசமாக பக்கத்திலுள்ள மேசையை ஒங்கி குத்தி பேசிக் கொண்டிருந்தால்……..அப்புறம் என்ன 58 வயது வந்திடும் வீட்டுக்கு போயிடலாம்*💥

💥 *ஆகவே மாறுங்கள்*💥

💥 *புதிய சிந்தனை, புதிய செயல்பாடு*💥

💥 *வெற்றி நிச்சயம்*💥

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here