கொடுத்த சம்பளம் போதும் என்று இருந்து விடுங்கள் ஆசிரியர்களே! கணத்த WHATSAPP பதிவு

கொடுத்த சம்பளம் போதும் என்று இருந்து விடுங்கள் ஆசிரியர்களே!

கல்விச் செயல்பாடுகள் தவிர வேறு பணிகளைச் செய்வது இல்லை என்பதை கொள்கை முடிவாக எடுங்கள்!

கல்விச் செயல்பாடுகள் தவிர வேறு பணிகளைச் செய்ய கால் சம்பளத்திற்கு வேலை செய்ய இளைஞர்கள் பட்டாளம் தயாராக இருக்கிறது… ஏன் சம்பளமே வாங்காமல் பணி செய்ய பாஜக இளைஞரணி கூட தயாராக இருக்கிறது…

ஏன் என்று கேட்டால் பணிநியமன ஆணைகளில் அப்படி எந்தவொரு பதமும் கொடுக்கப்பட்டு நாங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என்று கூறுங்கள்…. சம்பளம் தருகிறோமே என்று கேட்கும் அறிவாளிக் கூட்டம்… அந்த சம்பளம் தேர்தல் பணிக்கு வந்து போகும் செலவுக்கு கூட போதாது என்பதை முகத்தில் அடித்தது போல் கூறுங்கள்…

பள்ளிகளில் மட்டுமே ஆசிரியர்களாக இருக்க முயலுங்கள்…

உங்கள் சொந்த செலவில் பள்ளிகளுக்கு செலவு செய்வதை நிறுத்துங்கள்… விளம்பரத்துக்கு பயன்படுமேயன்றி அதனால் ஆசிரியர் சமுதாயத்திற்கு எள்ளளவும் பயனில்லை என்பதை உணர்ந்திடுங்கள்…

மாணவர்கள் படிப்பது கூட அவர்கள் விருப்பமாக இருக்கட்டும்… மாணவர்கள் திறமை மீது கேள்வி எழுப்பும் அதிகாரிகளை ஒரு மாதம் மாதிரி பாடம் எடுத்துக் காட்டி அவர்களது அடைவுத் திறனை மேம்படுத்தும் வழிமுறைகளை அவர்களிடமே பெற முயலுங்கள்…

பொதுமக்கள் நலனுக்கான போராட்டங்களை கண்டும் காணாதது போல் செல்லுங்கள்… காரணங்கள் பல எழுப்பப்படும் பணிநியமன ஆணைகளில் அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறுங்கள்…

சமூக சேவை செய்வதை நிறுத்துங்கள்…

ஓய்வூதியம் கொடுத்ததே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் வேறெந்த வகையிலும் வருமானம் பெறக்கூடாது என்ற நோக்கில் தான்… அந்த ஓய்வூதியமே இல்லை எனும் போது உங்கள் எதிர்கால தேவைக்கென பள்ளி வேலை நேரம் போக மற்ற நேரங்களில் செய்து பணத்தை ஈட்டுங்கள்…

அலுவலக பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ளாதீர்கள்… அலுவலக பணிகளை செய்ய அலுவலக பணியாளர்களை அரசு கால் சம்பளத்திற்கு பணியாளர்களை நியமித்து கொள்ளட்டும்…

குறிப்பாக எந்த ஒரு அரசியல் கட்சிக்காகவும் வாக்களிக்காதீர்கள்…

உங்களுக்கென குடும்பம் உள்ளது…குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட முயலுங்கள்…

வாழ்க்கையை ரசித்து வாழுங்கள்… வாழ்வு வளம் பெறும்…

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here