பிளஸ்2 செய்முறை தேர்வு தேதி மாறுமா?

செய்முறை பொதுத்தேர்வில், மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், பிளஸ், 2 மாணவர்களுக்கு, மார்ச், 1ம் தேதி முதல், 19ம் தேதி வரை, பொதுத்தேர்வு நடக்கிறது. அதற்கு முன் செய்முறை பாடங்களுக்கான, தேர்வு நடைபெறும். பிப்.,1ம் தேதி முதல், 12ம் தேதிக்குள், இத்தேர்வை நடத்தி முடிக்க வேண்டுமென, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளதால், செய்முறை தேர்வுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களை கொண்டு, பொதுத்தேர்வு மாணவர்களை தயார்ப்படுத்தும் முயற்சியில், கல்வித்துறை இறங்கியுள்ளது.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,’பிளஸ் 2 செய்முறை பொதுத்தேர்வுக்கு, ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. போராட்டங்களால் தேர்வு தேதியில் மாற்றம் இருக்கலாம். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்புக்கு காத்திருக்கிறோம்’ என்றார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

1 COMMENT

  1. If student absent in their exam,exam not stopped. Any teachers don’t about public exam today! This movements are very very well planned to proceed the students next year studies and their job opportunity.If this program disturb by anyone,the decisions are not in unbalanced manners.So our teachers please mind it in heartlevel.. This manners will reflect from our students,our teachers please lead in public relationship.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here