*_JACTTO-GEO NEWS_*

*_VERY URGENT_*

*_நாளைய(28.1.2019) ஜாக்டோ -ஜியோ போராட்டம் தொடர்பாக ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்களும், போராட்டக்காரர்களும், ஆசிரிய ஆசிரியைகளும் ,அரசு ஊழியர்களும்/பணியாளர்களும் கடைபிடிக்க வேண்டியவைகள்_*

*1.நாளை நடைபெற இருக்கின்ற போராட்ட களத்திற்கு தனித்தனியாக வந்து கூடாமல் ஒரு நேரம் குறிப்பிட்டு உதாரணத்திற்கு காலை 11 மணி அளவில் ஒன்று கூட நினைத்தால் 10.57 வரை களத்திற்கு அருகே மறைவான இடத்தில் அல்லது ஒதுங்கி இருக்க வேண்டும். சரியாக 11 மணி அளவில் போராட்ட களத்தில் ஆங்காங்கே ஒதுங்கி இருந்த அனைத்து போராளிகளும் உடனடியாக ஒன்று கூட வேண்டும்.*
*இதில் எந்தவித தொய்வும் ஏற்கக்கூடாது.*
*உடனே மறியல் போராட்டத்தை செய்யவேண்டும்.*

*2.அப்போது காவல்துறையினர் நம்மை கைது செய்தால் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அனைவரையும் கவனிக்க அனைவரையும் கைது செய்ய கேட்டுக் கொள்ள வேண்டும். அனைவரையும் கைது செய்த பிறகு மண்டபத்தில் அடைப்பார்கள்.* *அப்போது முடிந்த வரை அனைவரும் நடந்தே சென்று மண்டம் சேர முயற்சி செய்ய வேண்டும்.*

*3.மண்டபத்தில் அடைத்த பிறகு காவல்துறையால் வழங்கப்படுகின்ற நோட்டுப் புத்தகத்தில் நமது பெயரையோ முகவரியையோ அங்க அடையாளத்தையோ கையொப்பத்தையோ கண்டிப்பாக போடக்கூடாது.* *அவ்வாறு பெயரோ முகவரியோ அங்க அடையாளம் தெரியாத காவல்துறையினால் போராட்டக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. ரிமாண்ட் செய்ய முடியாது.*

*4.நாளை வரும் போராட்டக்காரர்கள் தங்களின் பெயரை முகவரியை அடையாளம் காட்டக் கூடிய எந்த ஆவணத்தையும் (AADHAAR, School ID, Driving License, etc…) கொண்டு வரக்கூடாது.*
*பெயர், முகவரி, கையொப்பம் அனைத்திற்கும் ஜேக்டோ-ஜியோ என்றே தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து ேஜக்டோ-ஜியோ போராளிகளும் சொல்ல வேண்டும் அனைத்திலும் பதிய வேண்டும்.*

*5. அடுத்தது முக்கியமாக நாம் மனதில் பதிய வைத்துக் கொள்வது மண்டபத்தில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களில் ஒரு சிலரை மட்டும் அல்லது குறிப்பிட்ட போராளிகளை மட்டும் கைது செய்ய காவல்துறை முயற்சி செய்தால் அதனை அனுமதிக்க கூடாது. அனைத்து போராளிகளும் ஒன்று சேர்ந்து அந்த கைது நடவடிக்கையினை தடுக்க வேண்டும்.*

*இந்த செயல்பாடானது ஒன்றிணைந்து செய்யவேண்டியது. எனவே மிகவும் கவனமாகவும் கட்டுப்பாட்டோடும் இந்த செயலை செய்து விட்டோமெனில் நாளை நமக்கு வெற்றி என்பது நிச்சயம்.*

ஒன்றுபடுவோம்!
போராடுவோம்!

போராடுவோம் !
வெற்றி பெறுவோம்!

இறுதி வெற்றி!
நமதே!

நாளைய (28.1.2019) போராட்ட களத்தில் சந்திப்போம்.

*ஜாக்டோ ஜியோ*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here