பகிர்வோம் பொதுமக்களுக்கு எட்டும் வரை…* *அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் போராட்டம் பணத்திற்கான போராட்டம் அல்ல..எதிர்கால தமிழகத்திற்கான, இளைஞர்களுக்கான போராட்டம் …

*பகிர்வோம் பொதுமக்களுக்கு எட்டும் வரை…*
*அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் போராட்டம் பணத்திற்கான போராட்டம் அல்ல..எதிர்கால
தமிழகத்திற்கான, இளைஞர்களுக்கான போராட்டம் ….*

இவைதான் 9 கோரிக்கைகள் ..இவை அனைத்தும் எங்கள் மாணவர்களின் தமிழக இளைஞர்களுக்கானவை..

1) ஏன்3500 பள்ளிகளை இணைத்து மாணவர்களின் கல்வியை பறிக்கும் செயலான பள்ளியை ஏன் மூடுகிறீர்கள் என்று கேட்டால் ?

ஆசிரியர்களுக்கு ஏற்கனவே சம்பளம் அதிகம் என்கிறது தமிழக அரசு..
   
2 )ஏன் எம்.ஜி.ஆர் ஏழை மாணவர்களுக்காக திறந்த 3500  சத்துணவு மையங்களை மூடறிங்க என்றால் ?

ஏற்கனவே ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமாக தருகிறோம் இன்னும் எவ்வளவு தருவது என்கிறது அரசு…

3) ஏன் அரசுப் பணிகளை குறைத்து Contract basis (காண்ட்ரேக்ட் அடிப்படையில்) & அவுட்சோர்சிங் முறையில் அரசாணை 56
போட்டிங்களே  யாருக்கும் இனி அரசு வேலை கிடையாது என்று அந்த ஆணையை இரத்து செய் என்று கேட்டால்

ஏற்கனவே ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமாக தருகிறோம் இன்னும் எவ்வளவு தருவது என்கிறது அரசு

4) எதிர்காலத்தில் இளைஞர்கள் யாரெல்லாம் அரசு ஊழியர் ஆசிரியர்களாக பணியேற்றாலும் அவர்களுக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என CPS இரத்து செய்து
பழைய ஓய்வூதியம் மாற்றி தரப்படும் என்று கூறியது என்ன ஆனது என்று கேட்டால்..

ஏற்கனவே ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமாக தருகிறோம் இன்னும் எவ்வளவு தருவது என்கிறது அரசு ..

5)விதிமுறைகளில் இல்லாத LKG ,UKG களுக்கு இடைநிலை ஆசிரியர்களை  ஏன் பயன்படுத்துகிறீர்கள்.புதியதாக அரசுப் பணிக்கு இளைஞர்களை நியமிக்கும் பொருட்டு பயிற்சி பெற்ற மாண்டிசோரி  ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டால்

ஏற்கனவே ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமாக தருகிறோம் இன்னும் எவ்வளவு தருவது என்கிறது அரசு ..
     
6)தொடக்க கல்விக்கென்று தனி துறையை உருவாக்கிய (எதிர்கட்சி உருவாக்கி இருந்தால் கூட பரவாயில்லை, தங்களின் மானசீக அம்மா அவர்கள் கடினப்பட்டு நல்லதுக்காக உருவாக்கிய தொடக்க கல்வியை அழிக்கின்ற)
கிராமப்புற மாணவர்களின் தொடக்கக் கல்வியை அழிக்கும் அரசாணை எண் 100,101 போன்றவற்றை இரத்து செய்து பழைய நிலையே (தங்களின் அம்மாவின் ஆசைக்கிணங்க)  தொடர வேண்டும் என்று நாங்கள் கேட்டால்…

ஏற்கனவே ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமாக தருகிறோம் இன்னும் எவ்வளவு தருவது என்கிறது அரசு ..
     
7 ) சரி சாமி எல்லாம் போகட்டும் மற்ற மாநிலங்கள் எல்லாம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த cps தொகையை மத்திய அரசிடம் கட்டி ரசீது பெற்று வைத்துள்ளனர் ஆனால் எங்கள் பணம் 30,00,00,000 ( முப்பதாயிரம் கோடி) எங்கே என்று கேட்டால் ..

ஏற்கனவே ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமாக தருகிறோம் இன்னும் எவ்வளவு தருவது என்கிறது அரசு ..
    
8)7வது ஊதிய குழுவின் மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என்று நாங்கள் கேட்டதை விட உங்கள் தேர்தல் அறிக்கையில்  நீங்கள் கூறினீர்கள், அதன் படி 21 மாத நிலுவை தொகை வழங்கவில்லை, இடைநிலை ஆசிரியர் ஊதிய வேறுபாட்டை களையவில்லை அதனை (நீங்கள் கூறியதை தான்) நாங்கள் கேட்கிறோம்

ஏற்கனவே ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமாக தருகிறோம் இன்னும் எவ்வளவு தருவது என்கிறது அரசு

எங்களை பார்த்து எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் என்கிறீர்கள்..
      
மக்களும் பிற கோரிக்கைகளை பின்னுக்கு தள்ளி சம்பளம் எவ்வளவு கொடுத்தாலும் இவங்களுக்கு போதாதாம்…
என்று ஏளனம் செய்யும் அளவிற்கு அவர்களின் காதுகளுக்கு ஒற்றை கோரிக்கையை மட்டும் மனதில் பதியவைத்த பெருமை அரசையே சாரும் ..

நாங்கள் போராடுவது எங்களுக்கு மட்டும் அல்ல எங்கள் எதிர்கால சந்ததிகளுக்கும் என்று உங்களுக்கும் எங்களளுக்கும் தெரியும்..

ஆனால் அரசியல்வாதிகளால் குழப்பப்படும் மக்களுக்கு உடனடியாக புரிய வாய்ப்பில்லை…

எப்படியும் இளைஞர்களின் எதிர்கால அரசு ஊழியர்களுக்கான சந்ததிகளுக்கான
JACTO GEO வின் கோரிக்கைகள்..

 *வெல்லும்*…

 பகிர்வோம் பொதுமக்களுக்கு எட்டும் வரை…

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here