உயர் நீதிமன்றத்தில் இன்று (23.01.2019) *ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க* கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்விசாரணையின் அடிப்படையில் நீதியரசர்கள் கீழ்கண்ட வாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

1. *மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் நடத்தும் இந்த தொடர் வேலை நிறுத்தத்தை கைவிட்டு வரும் 25.01.2019 க்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

2. *ஜாக்டோ ஜியோவினை அழைத்து பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு தீர்வு காண   வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது்.*

3. *ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கு மதுரை உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இவ்வழக்கையும் சேர்த்து விசாரிக்கும்.*
என சென்னை உயர் நீதி மன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கை குறித்து மாநில ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நாளை 24.01. 2019 சென்னையில் நடைபெறுகிறது.*

*ஆசிரியர் நண்பர்களே நீதிமன்ற நடவடிக்கை குறித்து எவ்வித கலக்க மோ, அச்சமோ கொள்ள தேவை இல்லை. இந்த நேரத்தில் நம் ஒற்றுமையை சீர்குலைக்க அரசு எடுத்த முடிவே ஆகும்.*

எனவே நாளை 24.01. 2019 அன்று திட்டமிட்டபடி நமது போராட்டம் நடைபெறும். இதில் அனைத்து வகை ஆசிரியர்களும், பணியாளர்களும் கலந்து கொண்டு அரசை திரும்பி பார்க்க செய்ய வேண்டும் என தங்களை பேரன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.*

*இப்படிக்கு*
*கி.மகேந்திரன்*
*மாநில* *ஒருங்கிணைப்பாளர்*
*ஜாக்டோ ஜியோ

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here