• மேஷம்
  மேஷம்:
  குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோ கத்தில்மதிக்கப்படுவீர்கள். கனவு நனவாகும் நாள். 
 • ரிஷபம்
  ரிஷபம்:
  எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனா லும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். நட்பு வட்டம் விரியும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். உத்யோ கத்தில் திருப்தி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.     
 • மிதுனம்
  மிதுனம்:
  தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக் கையை ஏற்பார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.  
 • கடகம்
  கடகம்:
  கடந்த இரண்டுநாட்களாக கணவன்- மனைவிக்குள்இருந்த மனப்போர்நீங்கும். வரவேண்டிய பணம்கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோ
  கத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்.   
 • சிம்மம்
  சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். அடுத்தவர் களை குறைக் கூறிக் கொண்டி ருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
 • கன்னி
  கன்னி: எடுத்த வேலை களை முழுமையாக முடிக்கமுடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை இயக்கும்போது அலைப் பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல் கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.  
 • துலாம்
  துலாம்:
  தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். மதிப்புக் கூடும் நாள்.  
 • விருச்சிகம்
  விருச்சிகம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.   
 • தனுசு
  தனுசு:
  கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப் பங்கள் விலகும். கோபம் குறையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.  
 • மகரம்
  மகரம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சிக்கனம் தேவைப்படும் நாள். 
 • கும்பம்
  கும்பம்:
  கடினமான காரி யங்களையும் எளிதாக முடிப் பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர் கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.   
 • மீனம்
  மீனம்: குடும்பத்தாரின் விருப் பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள். 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here