அறிவியல்-அறிவோம்: “புற்றுநோயை வரவேற்கும் உருளைகிழங்கு சிப்ஸ்”

​நீங்க உருளைக்கிழங்கு சிப்ஸ் பிரியரா?

பொன்னிறத்தில் மொறுமொறுவென, தின்னத் தின்னத் திகட்டாத வறுவல் வகைகள், நம் உயிருக்கே உலை வைக்கக் கூடும். 
உருளைக்கிழங்கு வறுவல், மரவள்ளிக் கிழங்கு வறுவல் போன்றவற்றை உட்கொள்வதால் உடற்பருமன் அதிகரிக்கும் என்பது நாம் அறிந்ததே..இது தெரிந்தும் உருளைகிழங்கு சிப்ஸை விரும்பி உண்பவரா நீங்கள்
அப்படியானால் புற்றுநோய் மருத்துவரிடம் இப்போதே அப்பாயின்ட்மென்ட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னாளில் உங்களுக்குத் தேவைப்படலாம். அளவுக்கதிகமாக உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுகிறவர்களுக்கு புற்று நோய் வருகிறது. உருளைக்கிழங்கை அதிகபட்ச கொதிநிலையில் டீப் ஃப்ரை செய்யும்போது அதிலிருந்து வெளியேறும் “அக்ரிலாமைட்” என்கிற ரசாயனமே புற்றுநோய்க்குக் காரணம்!
கார்போஹைட்ரேட் அதிகமா உள்ள ஒரு உணவை எந்தளவு சூடாக்கறோம், எவ்வளவு நேரம் சூடாக்கறோம்ங்கிறதைப் பொறுத்தே இந்த அக்ரிலாமைட் வெளியேறும். பொரிக்கிற, ரோஸ்ட் பண்ற, பேக் பண்ற உணவுகள் எல்லாம் இதுல அடங்கும். பிரவுன் நிற உணவுகளையும் சேர்த்துக்கலாம். காபி கொட்டையைக் கருக வறுத்து அரைக்கிறதுகூட  இந்த ரகம்தான்.
எஃப்.டி.ஏனு சொல்ற ஃபெடரல் டிரக் ஏஜென்சி, 2500 உணவுகளை மோசமானதுனு பட்டியலிட்டிருக்கு. அதுல உருளைக்கிழங்கு சிப்ஸூக்குதான் முதலிடம். “அந்தக் காலத்துல வத்தல், வடாம் சாப்பிடலையா? சிப்ஸூம் கிட்டத்தட்ட அப்படித்தானேனு கேட்கலாம். வத்தல், வடாம் என்பது வெயில்ல காய வச்சது. 
பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸில் கொழுப்பும் கலோரியும் அதிகம். இவை எடையை அதிகரிக்கும், உயர் ரத்த
அழுத்தத்தை உண்டாக்கும். பாக்கெட்டில் விற்கப்படும் சிப்ஸ்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாகக் கொடுக்கக்கூடாது. இது ஹார்மோன் மாற்றம் தொடங்கி உடல் எடை அதிகரிப்பு, கேன்சர் என பல அபாயகரமான நோயை உண்டாக்கும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here