ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், உயர் கல்விக்கு செல்லும், மூன்று மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு, செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சியை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ‘இஸ்ரோ’ வழங்க உள்ளது,” என, அதன் தலைவர், சிவன் கூறினார்.சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், மூன்று மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் உருவாக்கம் குறித்த, பயிற்சி வழங்க உள்ளோம்.14 ராக்கெட்டுகள்இந்த ஆண்டில், ௩௨ திட்டங்களை, இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. அதில், ௧௪ ராக்கெட்டுகள் மற்றும், ௧௭ செயற்கைக்கோள்களை, விண்ணில் செலுத்த உள்ளோம். குறிப்பாக, ‘சந்திரயான் ௨’ மற்றும், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும், ‘ககன்யான்’ திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.’ககன்யான்’ திட்டத்தில், விண்கலத்தில், மூன்று மனிதர்களை, விண்ணுக்கு அனுப்ப முடியும். அவர்கள், ஏழு நாட்கள் வரை, விண்வெளியில் தங்கியிருக்கும் வகையில், விண்கலம் வடிவமைக்கப்படும். ‘ககன்யான்’விண்ணுக்கு அனுப்ப தேர்ந்தெடுக்கப்படும், விண்வெளி வீரர்களுக்கு, ஆறு மாதம் முதல், ஓர் ஆண்டு வரை பயிற்சி அளிக்கப்படும்.’ககன்யான்’ திட்டத்தில், ௨௦௨௦ டிசம்பரில், ஒரு ராக்கெட்டையும், ௨௦௨௧ ஜூலை, டிசம்பர் மாதங்களில், தலா, ஒரு ராக்கெட்டையும், விண்ணில் செலுத்த திட்டமிட்டுஉள்ளோம். இதேபோல, விண்ணிற்கு சென்று, மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையிலான, மறுபயன்பாட்டு விண்கலம் தொடர்பான சோதனைகளும் நடந்து வருகின்றன.எஸ்.எஸ்.எல்.வி., எனப்படும், சிறிய ரக ராக்கெட்டுகள், ஜூலை அல்லது ஆகஸ்ட்டில், பரிசோதிக்கப்பட உள்ளன. ‘சந்திரயான் – ௨’ செயற்கைக்கோளுக்கு, கடுமையான உத்திகளுடன், புதிய சோதனைகளை கையாண்டு வருகிறோம். அந்த செயற் கைக்கோளுக் கான முதற்கட்ட சோதனைகள் நிறைவடைந்து உள்ளன.இரண்டாம் கட்ட சோதனைகள், ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும். அதன்பின், ‘சந்திரயான் – ௨’ செயற்கைக்கோள், விண்ணில் செலுத்தப்படும்.’நாவிக்’மீனவர்களுக்கான, ‘நாவிக்’ பாதுகாப்பு செயலி, தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்த, ௨௫௦ பேருக்கு, பரிசோதனை முறையில் வழங்கப்பட்டுஉள்ளது. விரைவில், இந்த செயலி, மற்ற மீனவர்களுக்கும் வழங்கப்படும்.இவ்வாறு, இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here