வாரத்தில் 5 நாட்களுக்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக்கொண்டால் உடலில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயனங்களை குறைக்கலாம் என்று கொரிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென்கொரிய விஞ்ஞானிகள் குழுவினர் உடல் நலனில் காய்கறிகளின் பங்கு பற்றி விரிவாக ஆராய்ந்தனர்.

அதற்காக ஒரு குழுவை தேர்வு செய்து அவர்களை கோயில் ஒன்றில் தங்க வைத்தனர். அவர்களுக்கு சைவ உணவை வழங்கப்பட்டது.. இந்த ஆய்வுக்கு முன்பும் அவர்களின் சிறுநீர் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் 5 நாட்களுக்கு பிறகும் குழுவினரின் சிறுநீர் பரிசோதிக்கப்பட்டது. கோயிலில் தங்கி சைவ உணவை மட்டுமே சாப்பிட்ட பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனையில் உடலில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயன சுரப்பு குறைந்திருந்தது தெரிய வந்தது.

வாரத்தின் மீதி நாட்களில் அசைவ உணவுகள், கொறிக்கும் வகையில், சாப்பிட அனுமதிக்கப்பட்டது. அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு எடுக்கப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயன சுரப்பு குறைந்திருந்தது தெரியவந்தது. எனவே வாரத்ததில் குறைந்தபட்சம் 5நாட்கள் காய்கறிகள் சேர்ந்த சைவ உணவு அவசியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சிக்குழு ஆய்வாளர் கூறுகையில் சைவ அசைவ உணவுகளால் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் சிறுநீர் பரிசோதனையில் உடனுக்குடன் தெரிகின்றது. ரசாயன சுரப்பை குறைத்து உடல் ஆரோக்கியத்தை காக்க வாரத்தில் 5நாட்கள் காய்கறிகள் கலந்த சைவ உணவு அவசியம் என்கின்றனர்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here